ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகிறது 'விருமன்'

ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகிறது 'விருமன்'

1 mins read
6dde326b-4e4a-48f3-859d-1008b11698d9
'விருமன்' படத்தில் கார்த்தி, அதிதி. -

கார்த்­தி­யும் இயக்­கு­நர் சங்­க­ரின் மகள் அதி­தி­யும் இணைந்து நடித்துள்ள 'விரு­மன்' படத்­தின் வெளியீட்டுத் தேதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சூர்­யா­வின் 2டி நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள படம் இது. 'கொம்­பன்' முத்­தையா இயக்கி உள்­ளார்.

கடந்த செப்­டம்­பர் மாதம் படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. மதுரை, தேனி உள்­ளிட்ட பகு­தி­க­ளில் முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னர்.

படப்­பி­டிப்பைத் திட்­ட­மிட்­ட­படி முடித்த இயக்­கு­நர் முத்­தையா, இப்­போது பின்­னணி இசை, வச­னப்­பதிவு ஆகிய பணிகளில் கவ­னம் செலுத்தி வரு­கிறார். இந்­நி­லை­யில் எதிர்­வ­ரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி, பிள்­ளை­யார் சதுர்த்­தியை முன்­னிட்டு இப்­படத்தை வெளி­யிட உள்­ள­தாக நடிகரும் தயா­ரிப்­பாளருமான சூர்யா அறி­வித்­துள்­ளார். ஆமுத்­தையா இயக்­கத்­தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளி­யான 'கொம்­பன்' திரைப்­ப­டத்­தில் கார்த்தி நடித்­தி­ருந்­தார். ஆறு ஆண்­டு­களுக்குப் பிறகு இரு­வ­ரும் இணைந்­துள்­ள­னர்.