'டான்' படத்தின் வெற்றியை அப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வெளியான இந்தப் படம் மூன்று நாள்களில் முப்பது கோடி ரூபாய் வசூல் கண்டது. அதன் பிறகும் வசூல் களைகட்டியதால், தயாரிப்புத் தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியாம். இந்நிலையில், சென்னையில் கூடிய படக்குழுவினர் சிவகார்த்திகேயனை வரவழைத்து, கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வசூல் ரீதியில் வரிசையாக மூன்று வெற்றிப் படங்களைத் தந்துள்ளார் சிவா.
இதையடுத்து தன் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று அவர் கூறினாலும், அவர் கேட்காமலேயே அதிக சம்பளம் தர சில தயாரிப்பாளர்கள் காத்திருப்பதாகத் தகவல்.

