திரைத்துளி­கள்

திரைத்துளி­கள்

2 mins read
5388ee5d-512e-46f5-ab0b-d4e11b30cdff
-
multi-img1 of 2

 இந்தித் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ள டாப்சி, தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய் துள்ளார். இரு படங்களுமே நாயகியை மையப்படுத்தி உருவாக உள்ளன. அவற்றில் ஒரு படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. மற்றொரு படத்தில் ஃபாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். சொந்தப் படம் எடுப்பதால் தாமே நாயகியாக நடிக்காமல் மற்ற நாயகிகளுக்கு வாய்ப்பு தருவது நல்ல விஷயம் என்று பலரும் டாப்சியைப் பாராட்டுகின்றனர்.

 எப்போதுமே சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக தகவல்களைப் பதிவிடுவார் யாஷிகா ஆனந்த். அவரது அண்மைய காணொளிப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்குறிப்பிட்ட காணொளியில் அவர் கதறி அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்கு அருகில் உள்ள நண்பர்களும் அழுகின்றனர்.

இதைக் கண்டு பதறிப்போன ரசிகர்கள், இதற்கான காரணம் என்ன என்று யாஷிகாவிடமே கேட்டுள்ளனர். அவர் விரைவில் விவரம் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார். இக்காணொ ளிப் பதிவு வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கான விளம்பர முயற்சியா என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 ரஜினியின் 169வது படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி, அங்கு சில வாரங்கள் தங்கிய பிறகு சென்னை திரும்புகிறார். அவர் வந்த கையோடு படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனராம். எனவே, அதற்கான ஏற்பாடுகளை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் செய்து வருவதாகத் தகவல்.

, :   