இது அன்னபூரணியின் கதை

இது அன்னபூரணியின் கதை

3 mins read
aa1c23bb-1177-4d90-a648-a3de6910b7c8
-

கதா­நா­ய­கி­களை மையப்­படுத்தி உரு­வா­கும் திரைப்­ப­டங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. அந்த வகை­யில் 'அன்­ன­பூ­ரணி' என்ற புதுப்­ப­டம் உரு­வாகி வரு­கிறது.

இதில் நடி­கை­கள் லாஸ்­லியா, லிஜோ­மோல் ஆகிய இரு­வ­ரும் கதை நாய­கி­க­ளாக நடித்­துள்­ள­னர். இது பெண்­ணி­யம் பேசும் படம் என்­கி­றார் இயக்­கு­நர் லயோ­னல் ஜோஸ்வா.

இவர் ஏ.ஆர்.ரகு­மா­னின் இசைப்­பள்­ளி­யில் ரஷ்­யன் பியானோ படிப்பை முடித்­து­விட்டு அவ­ரி­டமே பணி­பு­ரிந்­த­வர். திடீ­ரென இயக்­கு­நர் அவ­தா­ரம் எடுத்­துள்­ளார். படப்­பி­டிப்­பைத் தொடங்­கிய வேகத்­தில் மொத்­தம் 19 நாள்­க­ளி­லேயே அனைத்­துக் காட்­சி­க­ளை­யும் பட­மாக்­கி­விட்­டா­ராம்.

"எல்­லா­ரு­டைய உழைப்­பி­னால்­தான் இது சாத்­தி­ய­மா­னது. நான் மட்­டுமே கார­ண­மல்ல. முழுப் படப்­பி­டிப்­பை­யும் சென்­னை­யில்­தான் நடத்­தி­னோம். காலை ஆறு மணி முதல் இரவு ஒன்­பது மணி வரை பணி­கள் நடக்­கும்," என்­கி­றார் லயோ­னல் ஜோஸ்வா.

இன்­றைய நவீன உல­கில் குடும்­பங்­களில் எத்­த­கைய சூழல் நில­வு­கிறது என்­பதை அல­சு­கிறது 'அன்­ன­பூ­ரணி' படம். அனா, பூரணி ஆகிய இரு பெண்­க­ளின் கதை இது.

குடும்ப அமைப்­புக்­குள் இருக்­கும் பூர­ணிக்­கும் அத்­த­கை­ய­ அமைப்பே தேவை­யில்லை என்று சொல்­லும் அனா­வுக்­கு­மான பய­ணமே இந்­தப் படம். 'அனா'வாக லாஸ்­லியா, பூர­ணியாக லிஜோ­மோல் நடித்­துள்­ள­னர்.

"குடும்­பம்­தான் பெண்­ணைச் சிறைப்­ப­டுத்­து­கிறது என்­பார் தந்தை பெரி­யார். பெரி­யா­ரின் சிந்­த­னை­க­ளைப் படித்த பிறகு, தோழர் கவிதா கிருஷ்­ண­னின் புத்­த­கத்­தைப் படிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அப்­போ­து­தான் என் மன­தில் இந்­தக் கதை உரு­வா­னது.

"இந்­தக் குடும்ப அமைப்­பா­னது ஓர் ஆணுக்­குப் பாது­காப்­பா­க­வும் ஒரு பெண்­ணுக்கு எதி­ரா­ன­தா­க­வும் உள்­ளது. குடும்­பம் எனும் நிறு­வ­னம் பெண்­கள் மீதான வன்­மு­றைக்­க­ள­மாக மாறி உள்­ளது.

இதை­யெல்­லாம் வெறும் தக­வ­லாக, பாட­மாக இல்­லா­மல் நல்­ல­தொரு கதையை வைத்து விவ­ரித்­துள்­ளேன்.

"ஒரு நல்ல கதை­யா­னது அதற்­குத் தேவைப்­படும் அம்­சங்­களைத் தானே அமைத்­துக் கொள்­ளும் என்­பார்­கள். மராத்­தி­யில் ஒளிப்­ப­தி­வா­ள­ராக இருந்த என் நண்­பர் ஹெக்­டர் முதல்­மு­றை­யாக தமி­ழில் ஒளிப்­ப­திவு செய்­கி­றார். கோவிந்த் வசந்தா இசை­ய­மைக்­கி­றார்.

"இதில் கலை இயக்­கு­நர் அம­ர­னின் உழைப்­புக்­குப் பெரிய பங்கு உண்டு. பாடல்­கள் யுக­பா­ரதி. அவ­ரது வச­னங்­கள் இந்­தக் கதையை உயி­ரோட்­ட­மா­ன­தாக மாற்றி உள்­ளது," என்று சொல்­லும் லயோ­னல் ஜோஸ்வா, வச­னக் காட்­சி­களை 18 நாள்­க­ளி­லும் பாடல்­களை ஒரே நாளி­லும் பட­மாக்கி உள்­ளார்.

'ஜெய்­பீம்' படத்­துக்­குப் பிறகு பல கதை­கள் தேடி­வந்த போதும் லிஜோ­மோல் அனைத்­தை­யும் ஏற்­க­வில்லை. 'அன்­ன­பூ­ரணி' படத்­தின் கதை பிடித்­துப்­போ­ன­தால் உடனே ஒப்­புக்­கொண்­டா­ராம். கதைப்­படி, ஒரு காட்­சி­யில் லிஜோ­மோல் கார் ஓட்ட வேண்டி இருந்­தது. ஆனால் அவ­ருக்கு கார் ஓட்­டிப் பழக்­க­மில்லை. இருப்­பி­னும் இந்­தப் படத்­துக்­காக கார் ஓட்ட கற்­றுக் கொண்­டுள்­ளார்.

லாஸ்­லி­யா­வைப் பொறுத்­த­வரை வச­தி­யான குடும்­பத்­துப் பெண் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். இந்­தக் கதா­பாத்­தி­ரம்­தான் கதைக்கு திருப்­பு­மு­னை­யாக இருக்­கு­மாம்.

"நிறைய குடும்­பம் சார்ந்த அர­சி­யலை விவா­திக்க வைக்­கும். ஒரு சண்­டைக் காட்­சி­யில் டூப் போடா­மல் நடித்­துள்­ளார். இரண்டு நாய­கி­கள் உள்ள படம் என்­ப­தால் பல்­வேறு சுவா­ர­சி­யங்­கள் உள்­ளன.

"இரண்டு நாய­கி­களை வைத்­துப் பட­மெ­டுப்­ப­தில் சில சிக்­கல்­கள் உள்­ளன என்று அனு­ப­வம் வாய்ந்த நண்­பர்­கள் சிலர் என்­னி­டம் அடிக்­கடி கூறு­வ­துண்டு. அவற்றை எல்­லாம் கேட்ட பின்­னர் மன­துக்­குள் ஒரு­வித அச்­சம் இருந்­தது.

"நல்­ல­வே­ளை­யாக லிஜோ­மோ­லும் லாஸ்­லி­யா­வும் தோழி­க­ளைப் போல் பழ­கி­னர். மேலும் ஒரு­வர் சம்­பந்­தப்­பட்ட காட்­சிக்கு மற்­றொ­ரு­வர் உதவி செய்­தது பெரிய விஷ­யம்.

"ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அனு­ச­ர­ணை­யா­க­வும் படப்­பி­டிப்பு திட்­ட­மிட்­ட­படி முடி­வ­டைய உத­வி­க­ர­மா­க­வும் இருந்­தது பாராட்­டுக்­கு­ரி­யது," என்­கி­றார் இயக்­கு­நர் லயோ­னல் ஜோஸ்வா.

'அன்­ன­பூ­ரணி' திரைப்படம் திட்டமிட்­ட­படி வெளி­யீடு காணும் என அப்படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­து உள்­ள­னர்.