தான்யா: நான் ஒரு தேவதை

தமி­ழில் 'ட்ரி­கர்', 'அகி­லன்', 'இறக்கை முளைத்­தேன்' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார் தான்யா ரவிச்­சந்­தி­ரன்.

தன் தாத்தா, பழம்­பெ­ரும் நடி­கர் காலஞ்­சென்ற ரவிச்­சந்­தி­ரன் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் தமது வளர்ச்­சியைப் பாராட்டி இருப்­பார் என்­கி­றார் இவர்.

நக­ரத்­தில் பிறந்து வளர்ந்­தி­ருந்­தா­லும், சில படங்­களில் கிரா­மத்­துப்பெண் கதா­பாத்­தி­ரத்­தில் கச்­சி­த­மாக நடித்து பாராட்­டு­க­ளைக் குவித்­துள்­ளார் தான்யா.

"திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி ஐந்து ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இது­வரை ஐந்து படங்­களில் நடித்­துள்­ளேன். இது குறை­வான எண்­ணிக்கை என்று சிலர் சொல்­கி­றார்­கள். ஆனால் இடைப்­பட்ட காலத்­தில் கொரோனா தொற்­றுப்பர­வல் நம்மை இரண்டு ஆண்­டு­கள் முடக்­கிப்போட்­டதை மறந்­து­வி­டு­கிறார்­கள். எனவே அதைக் கழித்­து­விட்­டுப் பார்த்­தால் மூன்று ஆண்­டு­களில் ஐந்து படங்­கள் என்­பது பெரிய அதிர்ஷ்­டம் என்­பேன்.

"அது மட்­டு­மல்ல, இரண்டு படங்­களில் நடித்து முடித்­த­தும், முது­க­லைப்படிப்பை முடிக்­கும்­வரை வேறு படங்­களை ஒப்­புக்­கொள்ள வேண்­டாம் என்று வீட்டில் கண்­டிப்­பு­டன் கூறி­விட்­ட­னர். அத­னால், 'மனிதவள மேலாண்மை' தொடர்­பான படிப்பை முடிக்­கும்­வரை கோடம்­பாக்­கம் பக்­கம் திரும்­பிக்­கூ­டப் பார்க்க வில்லை," என்­கி­றார் தான்யா.

நடி­கர் ரவிச்­சந்­தி­ர­னின் பேத்தி என்­ப­து திரை­யு­ல­கில் தமக்­கான அடை­யா­ள­மாக இருப்­ப­தில் பெருமை கொள்­வ­தா­கக் குறிப்­பிடு­ப­வர், தாத்­தா­வின் கடின உழைப்­பை­யும் நேரம் தவ­றா­மை­யை­யும் தாம் பின்­பற்­று­வதா­கக் கூறு­கி­றார்.

"அவர் உயி­ரோடு இருந்­த­போது, 'சினி­மா­வில் நடிக்க விருப்­பமா' என என்­னைக் கேட்­டுக்­கொண்டே இருப்­பார். ஆசை இருந்­தா­லும் அவ­ரி­டம் கூறி­ய­தில்லை. அவ­ரு­டன் படப்­பி­டிப்­பு­க­ளைப் பார்க்­க ­வும் போன­தில்லை.

"ஆனால், வீட்­டுக்கு வரு­பவர்­களி­டம், 'என் பேத்தி... என்­னு­டைய தேவதை' என்று மறக்­கா­மல் சொல்­வார். அவ­ரைப் பொறுத்­த­வரை நான் தேவதை. ஒரு நடிகை­யாக என்­னைப் பார்க்க அவர் இல்லை என்­பது வருத்­தம் அளிக்­கிறது," என்று தன் தாத்­தா­வின் பெரு­மை­க­ளைச் சொல்லி நெகிழ்­கி­றார் தான்யா.

பத்­தாம் வகுப்பு படித்­துக்­கொண்­டி­ருந்­த­போதே தாத்தா ரவிச்­சந்­தி­ரன் கால­மா­கி­விட்­ட­தாக நினை­வு­கூர்­ப­வர், வீட்டில் இருந்து படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும் முன்­னர் பூசை அறை­யில் உள்ள தாத்­தா­வின் படத்­தைத் தொட்டு வணங்குவாராம்.

தமிழ் மட்­டு­மல்­லா­மல் தெலுங்­குப் படங்­களி­லும் கவ­னம் செலுத்தி வரு­ப­வர், 'ராஜா விக்­ர­மார்கா' படத்­தில் கார்த்­தி­கே­யா­வு­டன் ('வலிமை' பட வில்­லன்) இணைந்து நடித்­துள்­ளார்.

இந்­தப் படம் வசூ­லில் ஓர­ளவு சாதித்­ததை அடுத்து, தெலுங்­கில் புதுப்­பட வாய்ப்பு­கள் தேடி வரு­கின்­ற­ன­வாம். தெலுங்கு இணையத்­தொ­ட­ரில் கிரா­மத்­துப்பெண்­ணாக நடிக்க உள்­ளார் தான்யா.

"நான் பிறந்து வளர்ந்­தது எல்­லாம் நகர்ப்­பு­றப் பகு­தி­க­ளில்­தான் என்­றா­லும் கிரா­மங்­கள் எனக்கு அந்­நி­யம் கிடை­யாது. விடு­மு­றைக்­காக கொடைக்­கா­னல், ஊட்டி என்று பல இடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­வார் அப்பா. அங்கு தங்கி இருக்­கும்­போது அரு­கில் உள்ள கிரா­மங்­க­ளுக்­குச் செல்­வோம்.

"கிராம மக்­க­ளு­டன் அப்பா மணிக்­க­ணக்­கில் பேசும்­போது நானும் அரு­கில் இருந்து கவனிப்­பேன். கிரா­மத்து உணவு வகை­க­ளைச் சாப்­பிட்­டால் அவ்­வ­ளவு ருசி­யாக இருக்­கும்.

"இப்­படி கிரா­மத்து அனு­ப­வங்­கள் நிறைய உள்­ளன. அவை மறக்க முடி­யா­தவை," என்று சொல்­லும் தான்யா, தமி­ழில் கிருத்­திகா உத­ய­நிதி இயக்­கும் 'பேப்­பர் போட்' இணை­யத் தொட­ரில் நடித்து முடித்­துள்­ளார்.

'நெஞ்­சுக்கு நீதி' படத்­தில் ஊட­க­வி­ய­லா­ள­ராக நடித்­தி­ருப்­ப­வர், அடுத்து 'இறக்கை முளைத்­தேன்' படத்­தில் சிபிஐ புலன் விசா­ரணை அதி­கா­ரி­யாக அசத்தி உள்­ளார்.

"படத்­துக்­குப் படம் மாறு­பட்ட பாத்­தி­ரங்க ளில் நடிக்க விரும்­பு­கி­றேன். அதே­ச­ம­யம் வணிக அம்­சங்­கள் உள்ள படங்­களைத் தவிர்க்க முடி­யாது.

"இரண்டு வகைப் படங்­க­ளி­லும் நடித்­தால்­தான் திரை­யு­ல­கில் நீண்­ட­கா­லம் தாக்­குப்­பி­டிக்க முடியும்," என்று விவகமாகப் பேசு­கிறார் தான்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!