'யூடியூப்'பில் சாதித்த பாடல்கள்

'யூடியூப்'பில் சாதித்த பாடல்கள்

1 mins read
1a7b60a8-5a62-46c4-b1eb-6b75e9404f74
-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பத்தல பத்தல' பாடல் 'யூடியூப்'பில் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதை கமல் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

'பீஸ்ட்' படத்தில் அனிருத், ஜோனிதா காந்தி பாடிய 'அரபிக் குத்து' பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது முதல் இதுவரை 400 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதித்துள்ளது.