திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read
f6d0cac9-1c50-47f5-b7af-a7ac3f3abd1a
-
multi-img1 of 3

 படுக்கையறைக் காட்சி குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத் துள்ளார் மாளவிகா மோகனன். இவரும் தனுஷும் இணைந்து நடித்துள்ள 'மாறன்' படத்தில் படுக்கையறைக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைக் குறிப்பிட்டு, "அந்தக் காட்சி எத்தனை முறை படமாக்கப் பட்டது?" என்று இணையம் வழி நடைபெற்ற கலந்துரையாடலின்போது ரசிகர் ஒருவர் மாளவிகாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்துள்ள மாளவிகா, "உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்வதற்கு முன்னர், உங்கள் மனதுக்குள் எப்படிப்பட்ட மோசமான, வக்கிர எண்ணம் இருக்கிறது என்பதுதான் முதலில் தெரிய வருகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 'டான்' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி காந்த், சிவகார்த்தி கேயனை கைபேசியில் அழைத்துப் பாராட்டி உள்ளார். "படம் பிரமாதம். உங்கள் நடிப்பு மிகவும் அருமை யாக இருந்தது. கடைசி முப்பது நிமிடங்கள் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிய வில்லை," என்று ரஜினி கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கமல் ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

 'கைதி' திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப் பட்டு நேற்று வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் 121 நகரங்களில் சுமார் 300 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

, :   