கணவர், மகளை இழந்து கண்ணீர் சிந்தும் முன்னாள் கவர்ச்சி நடிகை ‘டிஸ்கோ’ சாந்தி

தவ­றான சிகிச்­சை­யால் கண­வ­ரை­யும் விதி­யின் விளை­யாட்­டால் ஒரே மக­ளை­யும் இழந்து, அவர்­க­ளின் நினை­வால் வாடு­வ­தா­கக் கூறு­கிறார் முன்­னாள் நடிகை 'டிஸ்கோ' சாந்தி.

முப்­பது வய­தைக் கடந்த சினிமா ரசி­கர்­க­ளுக்கு இவ­ரைப் பற்­றிய அறி­மு­கம் தேவை­யில்லை. மற்­ற­வர்­க­ளுக்­காக சிறு குறிப்பு.

தமிழ் சினி­மா­வில் ஒரு காலத்­தில் கவர்ச்சி வேடங்­களில் நடித்து இளை­யர்­களை தனது அழ­கா­லும் நட­னத்­தா­லும் கவர்ந்­த­வர் 'சில்க்' ஸ்மிதா. அவ­ருக்கு இணை­யாக கவர்ச்­சி கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துப் பெயர் வாங்­கி­ய­வர் டிஸ்கோ சாந்தி.

வெள்ளை மனசு படம் மூலம் தமி­ழுக்கு அறி­மு­க­மான இவர், பின்­னர் 'ஊமை விழி­கள்' திரைப்­படத்­தில் நட­ன­மா­டிய 'ராத்­திரி நேரத்து பூசை­யில்' என்ற பாடல் தமி­ழ­கத்­தின் பட்­டி­தொட்டி எங்­கும் வர­வேற்­பைப் பெற்­றது. அதன் பின்னர் பல்­வேறு மொழி­களில் ஏராளமான படங்­களில் ஒற்­றைப் பாட­லுக்கு குத்­தாட்­டம் போட்­டார் சாந்தி.

இறு­தி­யாக 1996ஆம் ஆண்டு 'துறை­மு­கம்' எ­னும் படத்­தில் நடித்­தி­ருந்­தார். அதே ஆண்­டில் ஸ்ரீஹரி என்­ப­வரைத் திரு­ம­ணம் செய்து கொண்ட பிறகு திரைத்­துறை­யி­ல் இருந்து வில­கிய டிஸ்கோ சாந்தி, தனது கண­வர், குழந்­தை­க­ளு­டன் அமை­தி­யான வாழ்க்­கையை வாழ்ந்து வந்­தார்.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு அவ­ரது கண­வர் திடீர் உடல்­ந­லக்­கு­றை­வால் கால­மா­னார்.

"தவ­றான சிகிச்­சை­தான் என் கண­வர் உயி­ரி­ழக்கக் கார­ணம். மருத்­து­வர்­கள் அவ­ருக்கு போட்ட ஊசி­யி­னால் ரத்த வாந்தி எடுத்து அநி­யா­ய­மாக என் கண­வர் உயி­ரி­ழந்­தார். இது­கு­றித்து விசா­ரித்­த­போது தவறு நடந்­து­விட்­டது மன்னித்­து­வி­டுங்­கள் என்று கெஞ்­சி­னர். இழப்­பீட்­டுத் தொகை தரு­வ­தா­க­வும் கூறி­னர்.

"இப்­போது எனது இரு மகன்­களு­டன் வாழ்ந்து வரு­கி­றேன். பிறந்து நான்கு மாதங்­க­ளான போது என் மகள் இறந்­து­விட்­டாள். மக­ளின் நினை­வாக அவ­ளது பெய­ரில் அறக்­கட்­டளை நிறுவி அதை வழி­நடத்தி வந்­தார் என் கண­வர். இப்­போது அவ­ரும் இறந்­து­விட்ட நிலை­யில், எனது இரு மகன்­க­ளு­டன் அறக்­கட்­ட­ளையை நடத்தி வரு­கி­றேன்.

"அனைத்து தென்­னிந்­திய மொழி­க­ளி­லும் இந்­தி­யி­லும் சில நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் எனக்கு அமைந்­தன. எனி­னும் கவர்ச்சி நடிகை­யா­கவே அறி­யப்­ப­டு­கி­றேன்.

"என் வாழ்­வில் நான் எதிர்­கொண்ட சோத­னை­கள், வேத­னை­கள், இழப்­பு­கள் இன்­னொரு பெண்­ணுக்கு ஏற்­ப­டக்­கூ­டாது. கண­வரை­யும் மக­ளை­யும் மறக்கமுடி­யா­மல் ஒவ்­வொரு நாளும் கண்­ணீ­ரு­டன் கடந்து போகிறது," என்­கி­றார் டிஸ்கோ சாந்தி.

இவ­ரது தங்கை லலித குமா­ரி­யும் நடி­கை­தான். இவர்­க­ளது தந்தை சி.எல்.ஆனந்­தன் அந்­நாள்­களில் முன்­னணி நடி­க­ராக பெயர் பெற்­ற­வர். டிஸ்கோ சாந்தியின் பேட்டி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!