‘இது நம்ப முடியாத பயணம்’

75வது கான் திரைப்பட விழாவில் இம்முறை நடுவராக கலந்து கொண்டுள்ளார் தீபிகா படுகோன். ‘தங்கப் பனை’ விருதுக் கான தேர்வுக் குழுவில் உள்ள எட்டு நடுவர்களில் இவரும் ஒருவர். கான் விழாவில் இந்தியா சார்பில் நடுவராகப் பங்கேற்பது பெருமிதம் அளிப்பதாக உள்ளது என்கிறார்.

“நடுவராகப் பங்கேற்பது நான் எதிர்பாராத ஒன்று. 15 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமானபோது என்னுடைய திறமையை, கலையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைக்கு நடுவராக இருப்பது என்பது, படங்களை மதிப்பிடுவதையும் தாண்டி, இந்த அனுபவம் நம்பமுடியாத பயணமாக இருந்திருக்கிறது. அதற்காக நான் நன்றியுடையவளாக இருக்கிறேன்.

“இந்தியாவின் பெருமிதங்களை நான் நம்புகிறேன். இது வெறும் தொடக்கம்தான். ஏ.ஆர்.ரஹ்மான், சேகர் கபூர் போன்றவர்கள்தான் இந்தியாவை உலகளவில் பிரதிநிதிக்கிறார்கள். அவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் இன்று இங்கு இருக்கிறோம்,” என்று தீபிகா கூறியுள்ளார்.

75 ஆண்டுகால கான் திரைப்பட வர லாற்றைப் பார்த்தால் இந்தியர்களின் பங்கு படங்களாக, கலையாக கவனிக்கத்தக்க வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்திய கலைஞர்களின் திறமை மீது தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“இந்தியா கான் விழாவில் பங்கேற்பது மாறி, ஒருநாள் இந்தியா வில் அந்த விழா நடைபெறும். நாம் அனைவருமே கலைஞர்கள். மதிப்பீடு செய்ய, விமர்சிக்க யாருக்கும் தகுதி இருக்குமா எனத் தெரியவில்லை. நான் தரமான படைப்புகளைக் கண்டு ரசிக்க மட்டுமே செய்வேன்,” என்கிறார் தீபிகா.

, :   

தீபிகா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!