‘காதலிப்பதாகச் சொல்லவே இல்லை’

புது­ம­ணத் தம்­ப­தி­ய­ரான ஆதி­யும் நிக்கி கல்­ரா­ணி­யும் தங்­க­ளு­டைய குடும்ப வாழ்க்­கையை உற்­சா­கத்­து­டன் தொடங்கி உள்­ள­னர்.

இவர்­க­ளது திரு­மண நாளன்று­தான் நிக்­கி­யின் மூத்த சகோ­தரி சஞ்­சனா ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்­துள்­ளார். அத­னால் நிக்­கி­யின் முகத்­தில் இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யைக் காண முடி­கிறது.

“முதன்­மு­த­லாக ‘யாகா­வா­ரா­யினும் நா காக்க’ படப்­பி­டிப்­பில்­தான் நிக்­கி­யைச் சந்­தித்­தேன். நான் அதி­கம் பேசாத ரகம். அவரோ வாய் ஓயா­மல் பேசிக்­கொண்டே இருப்பார்.

“ஆனால், அந்­தப் பேச்­செல்­லாம் மற்­ற­வர்­கள் மீதான கரி­ச­ன­மா­கவே இருக்­கும். வம்பு பேச மாட்­டார். அத­னால் அவரை எனக்கு மிக­வும் பிடித்­துப்­போ­னது.

“படப்­பி­டிப்பு முடிந்த பிற­கு ஒரு­வ­ரை­யொ­ரு­வர் அக்­க­றை­யு­டன் விசா­ரித்­துக்­கொள்வோம். இதில் ஆச்­ச­ரி­ய­மான திருப்­ப­மாக, திடீ­ரென என் வீட்­டுக்குப் பக்­கத்து வீட்­டி­லேயே குடி­பு­குந்­தார் நிக்கி. அதன் பிறகு நட்பு மேலும் பலப்­பட்­டது. எட்டு ஆண்­டு­க­ளாக ஒருவித ஈர்ப்பு நிலவி வந்­தது. காத­லிப்­ப­தாக ஒரு­வ­ருக்­கொரு­வர் சொல்­லிக்­கொள்­ளவே இல்லை. ஆனால் எல்­லாமே இயல்­பாக நடந்து, இதோ இப்­போது தம்­ப­தி­க­ளாக மாறி­விட்டோம்.

“என் பெற்­றோ­ருக்கு நிக்­கியை மிக­வும் பிடிக்­கும். அத­னால் அக்­க­றை­யு­டன் அவரை கவ­னித்­துக்­கொள்­கி­றார்­கள்.

“ஒரு பெண்­ணின் மன­தில் மகிழ்ச்சி இருந்­தால் அது அவ­ரது ஒவ்­வொரு செய­லி­லும் வெளிப்­படும். நிக்­கி­யி­டம் அதைக்காண்­கி­றேன். மொத்தத்தில் புது வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது,” என்­கி­றார் ஆதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!