திரைத் துளி­கள்

 விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. இத்தகவலை அப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்தது. சில சிக்கல்களால் அது சாத்திய மாகவில்லை. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்க, பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார் விக்ரம்.

 ‘பிங்க் நோட்’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார் பாவனா. இது இரட்டைச் சகோதரிகளை மையப்படுத்தும் கதையைக் கொண்டு உருவாகி றது. இது தவிர, ‘தி சர்வைவல்’ என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார் பாவனா. இது மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் படம். இதில் பாவனா குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருக்கி றார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அதனை எதிர்த்துப் போராடி எப்படி வாழ்க்கையிலும் குத்துச் சண்டையிலும் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

 தமிழ்த் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களைச் சரிவர சித்திரிப்பதில்லை என் கிறார் ஆர்.ஜே.பாலாஜி. நமது சமுதாயத்தில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையினராவது சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் தெலுங்கு முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர் ராம் சரண் வெளியிட்டுள்ளார். தெலுங்கு விநியோக உரிமை பெருந் தொகைக்கு விற்பனை யாகி உள்ளதாகத் தகவல்.

 நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் திரைப் படங்களில் நடிக்கத் தயார் என்கிறார் காம்னா ஜெத்மலானி.

கடந்த 2005ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயத் திருடன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்சுடன் ‘ராஜாதி ராஜா’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பிற மொழி களில் கவனம் செலுத்தியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!