திரைத் துளி­கள்

 நடிகர் அர்ஜுன் மீண்டும் படங்கள் இயக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்து வந்தார் அர்ஜுன். மேலும், 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் 'பிரேமா பரஹா' படத்தை இயக்கிய அவர், இப்போது தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதில் அவரது மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிப்பதாகத் தகவல்.

 பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள 'லவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து, வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். இதில், தனது நடிப்பு பேசப்படும் என்கிறார் வாணி போஜன். விக்ரம், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்த 'மகான்' படத்தில் இவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டனர். இந்நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்த பலரும் வாணியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

 சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படம் ஜூன் 23ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 யுவன் சங்கர் ராஜா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து, அவருக்கு நடிகர் கார்த்தி விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கி உள்ளார். கார்த்தி நடித்த 'பையா', 'நான் மகான் அல்ல', 'பிரியாணி' ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அப்படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இளையர்களை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ள கார்த்தி, தாமும் அவற்றை ரசித்ததாகவும் யுவன் இசைக்கு தாமும் தீவிர ரசிகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!