போராடிச் சாதிக்கும் ஜமுனா

'டிரை­வர் ஜமுனா' என்ற தலைப்­பில் ஐஸ்­வர்யா ராஜேஷ் நடித்­துள்ள படம் கோடம்­பாக்­கத்­தில் பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. திகி­லும் அடி­த­டி­யும் நிறைந்த பட­மாக உரு­வாகி உள்­ளது என்­கி­றார் இயக்­கு­நர் கின்ஸ்­லின்.

இவர் இயக்­கிய முதல் படம் 'வத்­திக்­குச்சி' வெளி­யாகி எட்டு ஆண்­டு­கள் ஆகின்­றன. இரண்­டா­வது படத்­துக்­கான கதையை தயார் செய்­யும்­போதே ஐஸ்­வர்யா ராஜேஷ்­தான் கதா­நா­யகி என மன­த­ள­வில் தீர்­மா­னித்­து­விட்­டா­ராம்.

"அவர் மறுத்­து­விட்­டாலோ, கால்­ஷீட் தர முடி­யாத சூழல் என்­றாலோ ஒன்­றும் செய்ய இய­லாது என்­ப­தால் வேறு சில நடி­கை­க­ளின் பெயர்­க­ளை­யும் மன­தில் வைத்­தி­ருந்­தேன். ஐஸ்­வர்­யாவை நேரில் சந்­தித்து கதை சொன்­னேன். முழு­மை­யாக விவ­ரித்து முடித்­த­தும் முதல் சந்­திப்­பி­லேயே நடிக்­கச் சம்­ம­தம் என்று சொல்­லி­விட்­டார்.

"ஐஸ்­வர்யா அதிக கவ­னத்­தோடு கதை கேட்­பார். கதை சொல்ல ஆரம்­பிக்­கும்­போ­தும் முடிக்­கும்­போ­தும் அதை கேட்­ப­வ­ருக்­குப் பிடித்­தி­ருக்­கி­றதா இல்­லையா என்­பதை அவர்­களு­டைய முக­பா­வத்தை வைத்து கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம்.

"ஐஸ்­வர்­யா­வி­டம் கதை­யைச் சொல்லி முடித்த­தும் உற்­சா­க­மா­கி­விட்­டார். அவர் முழு­மை­யான நடிகை. எத்­தகைய சோதனை முயற்­சி­களுக்­கும் தயா­ராக இருப்­பார். நன்­றாக ஒத்­து­ழைப்­பார். கடும் உழைப்பாளி.

"இந்­தப் படத்­தின் பெரும்­பா­லான காட்­சி­கள் பர­ப­ரப்­பான சாலை­களில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. கார­ணம் கதை­யின் அமைப்பு அப்­ப­டிப்­பட்­டது. சாலையை நன்கு கவ­னித்து பாது­காப்­பாக காரோட்ட வேண்­டும். வாட­கைக் கார் ஓட்­டு­ந­ருக்­கு­ரிய லாவகம் முக்­கி­யம். அந்த வகை­யில் ஐஸ்­வர்யா திற­மை­யா­கவும் பாது­காப்­பு­ட­னும் காரோட்­டி­னார். அது மட்­டு­மல்ல, அடுத்த காட்சியை எடுக்க வேண்­டிய இடம் சில கிலோ மீட்­டர் தூரத்­தில் இருந்­தால் அவரே காரோட்டி வந்­து­வி­டு­வார். அவ­ரு­டன் பணி­யாற்­று­வது இயக்­கு­நர்­க­ளுக்கு மகிழ்ச்சி கொடுக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர் கின்ஸ்­லின்.

தமக்­கான கதா­பாத்­தி­ரத்தை மெரு­கேற்­று­வ­தில் ஐஸ்­வர்­யா கெட்­டிக்­கா­ரர் என்று குறிப்­பி­டு­ப­வர், ஒவ்­வொரு வச­னத்­தை­யும் நன்கு உள்­வாங்­கிக் கொண்டு, காட்­சி­யின் தன்­மையை விரை­வா­கப் புரிந்­து­கொண்டு நடிப்­ப­தா­கப் பாராட்­டு­கி­றார்.

பிரம்­மாண்­டப் படம் என்­பது அதற்கு ஆகக்­கூடிய செலவை வைத்து கணக்­கி­டக்­கூ­டாது என்­றும் படத்­தில் நடிக்­கும் கலை­ஞர்­க­ளின் திற­மை­யும் உழைப்­பும் எந்த அள­வுக்கு ரசிகர்­களின் கவ­னத்தை ஈர்க்­கிறது என்­பதை வைத்து கணக்­கிட வேண்­டும் என்­றும் சொல்­கி­றார் கின்ஸ்­லின்.

"ஜமுனா என்ற கதா­பாத்­தி­ரத்­தில் ரசி­கர்­கள் வேறு ஒரு ஐஸ்­வர்யா ராஜே­ஷைப் பார்க்க முடி­யும். அந்த அள­வுக்கு ஈடு­பாடு காட்­டி­யுள்­ளார்.

"இது குற்­றச் சம்­ப­வங்­களும் திகி­லும் நிறைந்த படம். முழுக் கதை­யும் காரில் நடக்­கும். ஒரே நாளில் ஓர் இடத்­தி­லி­ருந்து இன்­னொரு இடம் சேரும்­வரை நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பு­தான் கதை. பெண் ஓட்­டு­நர் காரில் ஒரு பய­ணியை ஏற்­றிக்­கொண்டு செல்­கி­றார். அந்­தப் பயண நேரத்­தில் அவர் சந்­திக்­கும் பிரச்­சி­னை­கள் என்ன, எப்படிப் போராடி வெல்கிறார் என்­ப­து­தான் கதை.

"இது­போன்ற படம் தமிழ்ச் சினி­மா­வுக்­குப் புதி­யது. எதிர்­மறை நகைச்­சுவை, முழு­நீள வித்­தி­யா­ச­மான திகில் படம் ஆகி­யவை எல்­லாம் அண்­மை­யில்­தான் கோடம்­பாக்­கத்­துக்கு வந்­துள்­ளன.

"டிரை­வர் ஜமுனா' படத்­துக்­கான திரைக்­க­தையை அமைப்­பது மிக சவா­லான அனு­ப­வம். பொது­வாக ஒரு காட்­சியை நான்­கைந்து இடங்­களில் எடுப்­பார்­கள். ஆனால் மொத்­தப் பட­மும் காரில்­தான் நடக்­கும் என்று சொல்­லும்­போது எல்­லாமே சவா­லாக மாறி­வி­டு­கிறது ," என்­கி­றார் கின்ஸ்­லின்.

இந்­தப் படத்­தில் 'ஆடு­க­ளம்' நரேன், கவிதா பாரதி, ரஞ்­சனி, அபி­ஷேக், மணி­கண்­டன் உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். சில புது­மு­கங்­களும் அறி­மு­க­மா­கி­றார்­கள். ஜிப்­ரான் இசை­ய­மைக்க, கோகுல் பினாய் ஒளிப்­பதி­வைக் கவ­னிக்­கி­றார்.

"வத்­திக்­குச்சி' படத்­துக்­குப் பிறகு உடனே படைப்­பைத் தர முடி­ய­வில்லை என்­றா­லும் திரைத்­து­றை­யில்தான் இருந்தேன். இத்துறையில் இடை­வெளி ஏற்­படு­வ­தென்­பது தவிர்க்க முடி­யாது. ஆனா­லும் மகிழ்ச்­சி­யா­கவே இருந்­தேன். இப்­போது இரண்­டா­வது படத்­தில் ஐஸ்­வர்யா ராஜேஷ் போன்ற திற­மை­சா­லி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும்­போது வெற்றி என் கண்­க­ளுக்­குத் தெரி­கிறது," என்று நம்­பிக்­கை­யு­டன் பேசு­கி­றார் கின்ஸ்­லின்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!