‘நான் பெரிய நடிகன் அல்ல’

தமிழ் சினி­மா­வின் டான்­கள் என்­றால் அது சிவ­கார்த்­தி­கே­ய­னும் அனி­ருத்­தும்­தான் என்று அண்­மை­யில் உத­ய­நிதி பேசி­யது கோடம்­பாக்­கத்­தி­ன­ரால் உற்­றுக்­க­வ­னிக்­கப்­ப­டு­கிறது. தொடர்ந்து மூன்று வெற்­றிப் படங்­க­ளைக் கொடுத்­துள்­ளார் சிவ­கார்த்­தி­கே­யன்.

அடுத்து ரஜினி படத்­தில் நடிக்க உள்­ளார், இயக்­கு­நர் சங்­க­ரு­டன் பணி­யாற்­றப்­போ­கி­றார் என்று சிவா­வைப் பற்றி நாள்­தோ­றும் புதுப்­புது தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. ஆனால் அவர் வழக்­கம்­போல் அடுத்­த­டுத்த படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

"உத­ய­நிதி சார் பெருந்­தன்­மை­யா­ன­வர். சுற்றி இருப்­ப­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்த அப்­ப­டிப் பேசி­ய­தா­கவே கரு­து­கி­றேன். 'டான்' என்று சொல்­லும் அள­வுக்கு நான் பெரிய நடி­கன் கிடை­யாது. நல்ல நடி­கர் என்று பெயர் வாங்­கி­னால் அதுவே போதும். அதை நோக்­கித்­தான் எனது ஓட்­டம் இருக்­கிறது.

"டான்' படத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் பள்ளி, கல்­லூரி மாண­வ­னாக நடிக்க அதி­கம் மெனக்­கெ­ட­வில்லை. உண­வுக்­கட்­டுப்­பாடு என்­பதை எல்­லாம் யோசிக்­கவே இல்லை. பிரி­யாணி, ஐஸ்­கி­ரீம் இரண்­டை­யும் நிறுத்­தி­விட்­டாலே என் உடல்­வாகு கச்­சி­த­மா­கி­வி­டும்.

"இப்­ப­டி­யெல்­லாம் சிர­மப்­பட்டு நடிக்க வேண்­டுமா என இயக்­கு­நர் சிபி­யி­டமே கேட்­டேன். ஆனா­லும் உண்­மை­யான மாண­வர்­கள் மத்­தி­யில் உட்­கார்ந்து, அவர்­க­ளு­டன் பேசி நடிக்­கும்­போது எந்­தக் குறை­யும் தெரி­ய­வில்லை. அதை நினைக்­கும்­போது மன­நி­றை­வாக உள்­ளது," என்­கி­றார் சிவா.

கதை­களை கவ­ன­மாக தேர்வு செய்­தா­லும் ஒரு படத்­தின் வெற்றி ரசி­கர்­கள் எடுக்­கும் முடி­வில்­தான் உள்­ளது என்று குறிப்­பி­டு­ப­வர், மக்­க­ளின் ரசனை மாற­வில்லை என்­றா­லும் ஒரு படத்தை அணு­கும் வித­மும் பார்­வை­யும் மாறி­யுள்­ளது என்­கி­றார்.

"கைபேசி, ஓடிடி எனப் படங்­க­ளைப் பார்க்­கும் வச­தி­கள் அதி­க­ரித்­துள்­ளன. இதற்கு இடை­யில் நாம் நடிக்­கும் படங்­களும் ஓட­வேண்­டும் என்­றால் கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தில் கூடு­தல் கவ­னம் வேண்­டும்.

"ஒரு படத்­தின் வெற்­றிக்கு கதை, கதா­பாத்­தி­ரங்­கள் எனப் பல அம்­சங்­கள் கச்­சி­த­மாக அமைய வேண்­டும். இவை எல்­லாம் இயக்­கு­ந­ரின் பொறுப்பு. எந்­தக் கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும், அதற்கு நான் பொருத்­த­மாக இருப்­பேனா என்­பதை இயக்­கு­நர்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்.

"கல்­லூரி டான் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தா­கி­விட்­டது. அடுத்து ரவு­டிக்­கும்­பல் தலை­வ­னாக நடிப்­பீர்­களா என்று சிலர் கேட்­கி­றார்­கள். முன்பே குறிப்­பிட்­ட­து­போல் அந்­தக் கதா­பாத்­தி­ரம் எனக்­குப் பொருத்­த­மாக இருக்­கும் என இயக்­கு­நர் நம்­பி­னால், நடிக்க நான் தயார்," என்று சொல்­லும் சிவ­கார்த்­தி­கே­யன், ரஜி­னி­யு­டன் தாம் நடிப்­ப­தாக வெளி­யான தக­வலை மறுக்­கி­றார். அது தொடர்­பாக இது­வரை யாருமே தம்­மைத் தொடர்­பு­கொள்­ள­வில்லை என்­கி­றார்.

ஒரு பொழு­து­போக்கு கலை­ஞ­ரா­கத்­தான் திரை­யு­ல­கில் தாம் அறி­மு­க­மா­ன­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அத்­த­கைய படைப்­பு­க­ளுக்­குத்­தான் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­போ­வ­தா­கச் சொல்­கி­றார். அதே­ச­ம­யம் 'வேலைக்­கா­ரன்', 'ஹீரோ', 'கனா' போன்ற படங்­க­ளி­லும் நடித்து மக்­க­ளுக்கு நல்ல கருத்­து­க­ளைச் சொல்ல விரும்பு கிறா­ராம்.

"100 கோடி ரூபாய் வசூல் ஆட்­டத்­தில் நானும் சேர்ந்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்­கள். இந்த வெற்­றியை என் தலை­யில் ஏற்­றிக்­கொள்ள விரும்­ப­வில்லை. "நூறு கோடி ரூபாய் வசூ­லுக்­காக படம் எடுக்­கி­றோம் என்று அறி­வித்­து­விட்டு படம் எடுக்க முடி­யாது. அது மக்­கள் தீர்­மா­னிக்­கும் விஷ­யம்.

"மக்­க­ளுக்­குப் பிடித்­தால்­தான் அது 100 கோடி ரூபாய் படம்.

பாட­லா­சி­ரி­யர் நா.முத்­துக்­கு­மார் குடும்­பத்­துக்கு என்­னால் முடிந்த உத­வி­க­ளைச் செய்­கி­றேன். அது பெரிய விஷ­ய­மல்ல. கல்­லூரி நாள்­களில் யுவன் சங்­கர் ராஜா, நா. முத்­துக்­கு­மார் கூட்­ட­ணி­யில் உரு­வான பாடல்­கள்­தான் என்­னு­டைய அத்­தனை உணர்­வு­க­ளுக்­கும் வடி­கா­லாக அமைந்­தன. நா.முத்­துக்­கு­மாரை நான் இரண்டு முறை பார்த்­தி­ருக்­கி­றேன், பேசி­யி­ருக்­கி­றேன். எந்­தப் பாட­லாக இருந்­தா­லும் 15 நிமி­டங்­களில் எழு­து­வார் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். அவரை நான் ஆழ­மாக ரசித்­தி­ருக்­கி­றேன்.

"அவர் மர­ணத்­துக்­குப் பின் அஞ்­சலி செலுத்த சென்­ற­போது என் கண்­ணில்­பட்­டது ஒன்­று­தான். அவ­ரு­டைய குழந்தை அவ­ரது உட­லுக்கு அரு­கி­லேயே அமர்ந்­தி­ருந்­தது. "அது என்னை வெகு­வா­கப் பாதித்­தது. நான் எழு­தும் பாடல்­க­ளுக்­குக் கிடைக்­கும் தொகையை அந்­தக் குடும்­பத்­துக்கு அளிக்­கி­றேன்," என்­கி­றார் சிவ­கார்த்திகேயன்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!