பிறந்தநாள் கொண்டாடிய உக்ரேன் நடிகை

பிறந்தநாள் கொண்டாடிய உக்ரேன் நடிகை

1 mins read
181451af-98cc-4894-a60a-c1a9a6328232
மரியாவுடன் சிவகார்த்திகேயன். -

சிவ­கார்த்­தி­கே­ய­னின் இரு­ப­தா­வது படத்­தின் நாய­கி­யான உக்­ரேன் நடிகை மரியா ரபோ­ஷப்கா சில தினங்­க­ளுக்கு முன்­னர் 'எஸ்கே 20' படக்­கு­ழு­வு­டன் தமது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டி­யுள்­ளார்.

படக்­கு­ழு­வி­ன­ரின் அன்பு தம்மை நெகிழ வைத்­துள்­ள­தாக அவர் தமது சமூக ஊட­கப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­படங்­களை அவர் பகிர்ந்­ததை அடுத்து, சிவ­கார்த்­தி­கே­ய­னின் ரசி­கர்­கள் பல­ரும் அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

"இப்­ப­டத்­தில் என்­னு­டன் நடிக்­கும் சத்­ய­ரா­ஜ், பிரேம்ஜி அம­ரன் என அனை­வ­ரும் பிறந்­த­நாள் வாழ்த்து கூறி­யது என்னை மேலும் உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது. இப்­ப­டிப்­பட்ட அன்பை நான் எதிர்­பார்க்­கவே இல்லை," என்­கி­றா­ராம் மரியா.

'எஸ்கே 20' முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. முதன்முறையாக சிவா நடிக்கும் படத்துக்கு இசையமைத்துள்ளார் தமன்.