கமல்: வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பார்க்க வேண்டாம்

கமல்: வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பார்க்க வேண்டாம்

1 mins read
0e406956-f35f-4f42-aba7-fc26f1fa8a68
நடிகர் கமல்ஹாசன். -

நான்கு ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு தாம் நடித்­துள்ள படத்­தைக் காண ரசி­கர்­கள் ஆர்­வ­மாக இருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் கமல்­ஹா­சன்.

இதற்­காக பார்­வை­யா­ளர்­க­ளுக்­குத் தாம் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ள­தாக அண்­மைய பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­திய சினி­மாவை வடக்கு, தெற்கு என்று பிரித்­துப் பேசு­வது பற்றி கேட்­கின்­ற­னர். என்னை எப்­போ­தும் ஓர் இந்­தி­ய­னா­கவே பார்க்கி­றேன். இந்­தி­யா­வில் எந்­தப் பகுதி­யி­லும் என்­னால் வச­தி­யாக இருக்க முடி­யும். இது­தான் பன்முகத் தன்மை கொண்ட இந்­தி­யா­வின் அழகு.

"வடக்­கி­லும் தெற்­கி­லும் இருக்­கும் திற­மை­களை அறி­வேன். அவற்­றைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. இந்­தியா முழு­வ­தும் தயா­ரிக்­கப்­படும் திரைப்­ப­டங்­களை உல­க­ள­வில் கொண்­டு­போய்ச் சேர்க்க முடி­யும்.

"இவ்­வி­ஷ­யத்­தில் நாம் பெரும் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டோம். இனி­யும் அது நீடிக்­கக்­கூ­டாது. இந்­தி­யத் திரை­யு­லகை உலக அரங்­குக்­குக் கொண்டு செல்­வதை திரை­யு­ல­கி­னர் பார்த்­துக்­கொள்­வார்­கள். அரசு இதில் தலை­யிட வேண்­டாம்," என்­றார் கமல்­ஹா­சன். இவர் நடித்த 'விக்ரம்' படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.