கீர்த்தியின் புதிய ஆசைகள்

கீர்த்தியின் புதிய ஆசைகள்

3 mins read
0da0b16c-8bf3-40df-a869-e12b7ed5c23d
-

இந்­தி­யா­வில் பேசப்­படும் அனைத்து மொழி­க­ளி­லும் தயா­ரா­கும் படங்­களில் நடிக்க விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

சிவ­கார்த்­தி­கே­யன் இவ­ரு­டன் இணைந்து நடிக்க மறுத்­து­விட்­ட­தாக வெளி­யான தக­வல் உண்மை அல்ல என்­றும் கூறு­கி­றார்.

"நானும் அவ­ரும் ஒரு படத்­தில் மட்­டும் நடித்­தி­ருந்­தால் இது­போன்ற வதந்தி ஓர­ளவு எடு­பட்­டி­ருக்­கும். ஆனால், இரு­வ­ரும் மூன்று படங்­களில் நடித்­தி­ருக்­கி­றோம். இரு­வ­ருக்­கும் வய­தா­கி­வி­ட­வில்லை. நிறைய கால அவ­கா­சம் உள்­ளது. நல்ல கதை­யும் சூழ்­நி­லை­யும் அமை­யும்­போது இரு­வ­ரும் மீண்­டும் இணைந்து நடிப்­போம்," என்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

மணி­ரத்­னம், சங்­கர், ராஜ­மௌலி ஆகி­யோ­ரின் இயக்­கத்­தில் நடிக்க விரும்­பு­வ­தாக குறிப்­பி­டு­ப­வர், விஜய், விஜய் சேது­பதி, ஜெயம் ரவி, கார்த்தி ஆகி­யோ­ரு­டன் ஜோடி சேர­வும் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தமிழை விட்­டு­விட்டு தெலுங்குப் படங்­க­ளுக்கு தாம் முன்­னு­ரிமை தரு­வ­தாக கூறப்­ப­டு­வ­தை­யும் கீர்த்தி தரப்பு திட்­ட­வட்­ட­மாக மறுக்­கிறது.

"தமி­ழில் 'அண்­ணாத்த', 'சாணி காயி­தம்' ஆகி­ய­வற்­றுக்­குப் பிறகு 'மாமன்­னன்' படத்­தில் நடித்து வரு­கி­றேன். இதற்­கி­டையே, மகேஷ் பாபு­வுக்கு ஜோடி­யாக நடித்த தெலுங்­குப் படம் வெளி­யாகி உள்­ளது.

"மேலும் ஒரு தெலுங்­குப் படத்­தி­லும் நடித்து வரு­கி­றேன். எனவே, தமிழ், தெலுங்கு எனப் பிரித்­துப் பார்ப்­ப­தில்லை. நல்ல வாய்ப்­பு­கள் அமைந்­தால், அவற்­றில் நடிக்க கால அவ­கா­சம் இருந்­தால் நிச்­ச­ய­மாக அவற்றை ஏற்­பேன்," என்­கி­றார் கீர்த்தி.

திடீர் திடீ­ரென உடல் எடை­யைக் குறைப்­பது ஏன் என்று சிலர் கேட்­கி­றார்­க­ளாம். கதை­யும் கதா­பாத்­தி­ர­மும்­தான் ஒரு படத்­துக்­கான தனது தோற்­றத்­தைத் தீர்­மா­னிக்­கும் என்­கி­றார்.

"மகா­நதி' படத்­துக்­குப் பிறகு ஏழு மாதங்­கள் வீட்­டில் இருந்­த­போது உடற்­ப­யிற்சி, உண­வுக் கட்­டுப்­பாடு என இருந்­தேன். அதன் பிறகு எடை­யைக் குறைத்­தேன்.

"எனது நடிப்­பில் வெளி­யான படங்­க­ளைப் பார்த்­தாலே, எதற்­காக உடல் இளைத்­தேன், ஏன் உடல் எடையை அதி­க­ரித்­தேன் என்­ப­தெல்­லாம் தன்­னால் புரி­யும். தற்­போது ரசி­கர்­கள் அதி­கம் எதிர்­பார்க்­கி­றார்­கள். அதற்­காக அதி­கம் மெனக்­கெட வேண்­டி­யுள்­ளது.

"தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என சில மொழி­களில் நடித்­தி­ருக்­கி­றேன். இன்­னும் நிறைய மொழி­களில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை இருக்­கிறது. இப்­படி பல மொழி­களில் நடித்­தாலே 'பான் இந்­தியா' எனப்­படும் நாடு முழு­வ­தும் உள்ள அனைத்து மொழி ரசி­கர்­க­ளுக்­கும் ஏற்ற பிரம்­மாண்­டப் படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் தன்­னால் அமை­யும் என நம்­பு­கி­றேன்," என்று சொல்­லும் கீர்த்­திக்கு, விஜய் சேது­ப­தி­யின் நடிப்பு மிக­வும் பிடிக்­கு­மாம்.

சேது­பதி சவா­லான கதா­பாத்­தி­ரங்­க­ளில்­கூட அசத்­த­லாக நடிப்­ப­தா­க­வும் அவ­ரது நடிப்­புப்­பாணி வித்­தி­யா­ச­மாக உள்­ளது என்றும் சொல்­கி­றார்.

"விஜய் சேது­பதி முழுப் படத்­தை­யும் தன் தோளில் சுமக்­கும் திற­மை­யைக் கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரு­டன் இணைந்து நடிப்­பது நிச்­ச­யம் சவா­லான அனு­ப­வ­மாக இருக்­கும். அதே­போல் ஜெயம் ரவி, கார்த்­தி­யின் நடிப்­பும் பிடிக்­கும்.

"அண்­மை­யில் 'சாணிக் காயி­தம்' படத்­தில் நடித்­த­போது, செல்­வ­ரா­க­வ­னின் நடிப்­பைக் கண்டு மிரண்டு போனேன். ஒரு­முறை தனுஷை சந்­தித்­த­போது அவ­ரி­டம் இது­கு­றித்து கூறி­னேன். அவரோ, 'நானும்­கூட அண்­ண­னி­டம் இருந்­து­தான் பல நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். எந்த கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அவர் கச்­சி­த­மாக நடித்­துக்­காட்­டு­வார்' என்­றார்.

"அண்­மை­யில் ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­போது, என் சம்­பளம் குறித்து சிலர் கேள்வி எழுப்­பி­னர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­க­ளி­லும் ஒரே சம்­ப­ளம்­தான் வாங்­கு­கி­றேன். சில சம­யங்­களில் நல்ல கதை­யைத் தயா­ரிக்­கும் சிறிய நிறு­வ­னங்­களுக்­காக சம்பளத்தை சற்று குறைத்­துக்­கொள்­வ­தும் உண்டு.

"'சாணிக் காயி­தம்' போன்ற படங்­களில் தொடர்ந்து நடிப்­பேன். அதே­சமயம், வணி­கப்­ப­டங்­க­ளி­லும் நல்ல பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் ஏற்­றுக்­கொள்­வேன்," என்­கி­றார் கீர்த்தி சுரேஷ்.

, :   