பாலாஜி: அறிவுரைகள் போதும்

ஆர்ஜே பாலாஜி இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள 'வீட்ல விசே­ஷம்' முழுநீள குடும்­பப்­ப­ட­மாக உரு­வாகி உள்­ளது. சத்­ய­ராஜ், ஊர்­வசி உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

பாக்­ய­ராஜ் இயக்­கத்­தில் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெளி­யான படம் 'வீட்ல விசே­ஷம்'. அதன் தலைப்பை மட்­டும் பாக்­ய­ரா­ஜி­டம் கேட்­டுப் பெற்­ற­ன­ராம்.

"படத்­தின் தலைப்பை வைத்தே இது குடும்­பப்­ப­டம் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­யும். இந்­தி­யில் வெளி­யாகி வெற்றி பெற்ற கதையை தமி­ழி­லும் பட­மாக்­கி­னால் நன்­றாக இருக்­கும் எனத் தயா­ரிப்­பா­ளர் போனி கபூர் கரு­தி­னார். இந்த வாய்ப்பு என்­னைத் தேடி­வந்­த­போது பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைத்­தேன். இந்­திப் பதிப்­பில் சில மாற்­றங்­க­ளைச் செய்து, தமிழ் ரசி­கர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு உரு­வாக்கி உள்­ளோம்," என்­கி­றார் ஆர்ஜே பாலாஜி.

இவ­ரது 'மூக்­குத்தி அம்­மன்' படத்­தில் இடம்­பெற்ற குடும்­பக்காட்­சி­கள் சிறப்­பாக இருந்­த­தாக விமர்­சகர்­கள் பாராட்டி இருந்­த­னர். அத­னால் அதேபோன்ற காட்­சி­களை புதுப்­ப­டத்­தி­லும் வைத்­துள்­ளா­ராம்.

"நம் எல்லோ­ருக்­குமே துக்­கம், வறுமை, ஏழ்மை, சோகம் என்று எல்­லாம் இருக்­கும். அவை எது­வுமே எனக்­குப் பிடிக்­க­வில்லை. ஆனால் அத்­த­னைக்­கும் நடு­வில் எல்­லோ­ருக்­கும் வாழ்க்கை­யில் ஒரு நம்­பிக்கை இருக்­கிறது அல்­லவா, அது­தான் என் ஆச்­ச­ரி­யம்.

"அப்­ப­டிப்­பட்ட ஆச்­ச­ரி­யங்­க­ளை­யும் நம்­பிக்­கை­க­ளை­யும் தரு­கிற படங்­களை உரு­வாக்கவேண்­டும் என்று எனக்கு ஆசை. ஒரு நகைச்­சுவை நடி­க­ராக இருந்­து­கொண்டு நம் மன­துக்கு ஒப்­பாத சில விஷ­யங்­களைக்­கூட செய்ய வேண்­டி­யி­ருக்­கும். அப்­படி இல்­லா­மல் எனக்­குப் பிடித்த கருத்­து­களைச் சொல்ல காத்­தி­ருந்­தேன். அப்­போது­தான் இந்­தப் புதுப்­பட வாய்ப்பு தேடி வந்­தது," என்­கி­றார் பாலாஜி.

ஐம்­பது வய­துப் பெண்­மணி மீண்­டும் தாய்மை அடை­கி­றார். எதிர்­பா­ராத அந்­தச் சூழலை அவ­ரது குடும்­பத்­தில் மகன், பாட்டி உள்­ளிட்ட பலர் எப்­படிப் பார்க்­கி­றார்­கள் என்­பது­தான் 'வீட்ல விசே­ஷம்' படத்­தின் கதை.

உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­க­ளுக்கு குறை­வில்­லாத பட­மாம். அதற்­காக சமு­தா­யத்­துக்குத் தேவை­யான கருத்து என்­றெல்­லாம் எதை­யும் திணிக்­க­வில்லை என்­கி­றார்.

"தினந்­தோ­றும் நூற்­றுக்­க­ணக்­கான அறி­வு­ரை­களைக் கேட்டு வரு­கி­றோம். இதற்­கும்­மேல் திரைப்­படங்­க­ளி­லும் அறி­வுரை சொன்­னால் ரசி­கர்­க­ளால் தாங்க முடி­யுமா என்று தெரி­ய­வில்லை.

"இந்­தப் படம் அனை­வ­ருக்­கும் பிடித்­த­மா­ன­தாக இருக்­கும். முழுப்­ப­டத்­தை­யும் பார்த்த சத்­ய­ராஜ் சார், 'என்­னோட சிறந்த பத்­துப் படங்­களில் இது­வும் ஒன்­றாக இருக்­கும். இப்­ப­டிப்­பட்ட படங்­களில் நடிக்­கும்­போ­து­தான் திரை­யு­ல­கில் இருக்­கி­றோம் என்ற மகிழ்ச்சி ஏற்­ப­டு­கிறது' என்­றார்.

"அவ­ரைப் போன்ற பெரிய கலை­ஞ­ரி­டம் இருந்து இந்த வார்த்­தை­க­ளைக் கேட்க கொடுத்து வைத்­தி­ருக்க வேண்­டும். ஊர்­வசி அம்­மா­வுக்கு ஒரு கதா­பாத்­தி­ரம் அமைந்­து­விட்­டால் அதை வேறோர் உய­ரத்­துக்குக் கொண்டு சென்­று­வி­டுவார் என்­பது அனை­வ­ருக்­குமே தெரி­யும். இந்­தப் படத்­தில் அவ­ரது மக­னாக நடிக்­கி­றேன். எனக்கு இணை­யாக அபர்ணா நடிக்­கி­றார். என்­னோடு சேர்ந்து இந்­தப் படத்தை சர­வ­ண­னும் இயக்­கு­கிறார். எங்­கள் கூட்டணி மூன்று படங்­க­ளாகத் தொடர்­கிறது," என்­கி­றார் பாலாஜி.

சமூக ஊட­கங்­களில் இப்­போது எந்த கருத்­தை­யும் முன்­வைக்க முடி­ய­வில்லை என்­ப­வர், எதைச் சொன்­னா­லும் அதை எதிர்ப்­ப­தற்கு என்று ஒரு கூட்டம் கிளம்பி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"இரண்­டும் இரண்­டும் நான்கு என்று எழு­தி­னால்­கூட அதில் தவறு இருப்­ப­தா­கக் கூறிக்­கொண்டு 15 பேரா­வது களத்­தில் குதிக்­கி­றார்­கள். என்­னைச் சுற்றி இருப்­ப­வர்­கள் மீதான அக்­கறை எனக்­குக் கூடப்பிறந்­தது.

"என் மன­திற்­குப் பட்­டதை என்­னால் சொல்­லா­மல் இருக்க முடி­யாது. பல இடங்­களில் என்­னைச் சந்­திப்­பவர்­கள், 'சரி­யா­கப் பேசி­னீர்­கள்' என்று பாராட்­டு­கி­றார்­கள். பெரி­ய­வர்­கள் கைகொடுத்து, முது­கில் தட்­டிக்­கொ­டுக்­கி­றார்­கள்.

"எங்­கள் பக்­கத்து நியா­யத்­தைச் சொல்­லி­விட்­டீர்­கள் என பெண்­ம­ணி­கள் சொல்­கி­றார்­கள். இப்­படி நல்­ல­படி பேசு­வது நிறைய பேருக்­குப் போய்ச் சேர்­வ­தால் அதை எப்­போ­தும் செய்­யப்போகி­றேன்," என்­கி­றார் ஆர்ஜே பாலாஜி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!