கமல்ஹாசன்: நல்ல விருந்து காத்திருக்கிறது

கமல்­ஹா­சன் நடித்­துள்ள 'விக்­ரம்' படம் இது­வரை இல்­லாத அள­வுக்கு வெளி­யீட்­டிற்கு முன்பே பெருந்­தொகைக்கு வியா­பா­ர­மாகியுள்­ளது.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள இந்­தப் படத்­தில் கமல், விஜய் சேது­பதி, பகத் பாஃசில், காளி­தாஸ் ஜெய­ராம் உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

எதிர்­வ­ரும் ஜூன் 23ஆம் தேதி உல­கெங்­கும் திரை­காண உள்ள இப்­ப­டத்­தின் வெளி­யீட்டு உரிமை ரூ.172 கோடிக்கு விற்­கப்­பட்­டுள்ளது. நடி­க­ரும் எம்­எல்­ஏ­வு­மான உத­ய­நிதி ஸ்டா­லி­னின் ரெட் ஜெயன்ட் நிறு­வனம் இப்­ப­டத்தை வெளி­யி­டு­கிறது.

ஸ்டார் நெட்­வொர்க் நிறு­வ­னம் அனைத்து மொழி­க­ளுக்­கான தொலைக்­காட்சி, மின்­னி­லக்க உரிமையை ரூ.93 கோடி ரூபாய்க்கு கைப்­பற்­றி­யுள்­ளது.

ஏற்­கெ­னவே பாடல் உரி­மம் ரூ.4.25 கோடிக்­கும் வெளி­நாட்டு உரிமம் ரூ.25 கோடிக்­கும் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது.

இப்­படி அனைத்து வகை­யி­லும் சேர்த்து இது­வரை ரூ.172 கோடியை ஈட்­டி­யுள்­ளது 'விக்­ரம்' திரைப்­ப­டம்.

இதற்­கி­டையே 'விக்­ரம்' படக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது 'விக்­ரம்' படத்­தின் மூன்­றா­வது பாகம் உரு­வா­னால், அதை­யும் லோகேஷ் கன­க­ராஜ்­தான் இயக்­கு­வார் என்­றார் கமல்.

"நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நான் நடித்­துள்ள படம் திரை­காண்­கிறது. நான்கு ஆண்­டு­க­ளாக என் ரசி­கர்­களை காக்க வைத்­த­தற்கு மன்­னிப்பு கேட்­டுக் கொள்­கி­றேன். லோகேஷ் கன­க­ரா­ஜுக்கு நன்றி கூறி­னால் அவர் வெளி­மனி­த­ரா­கி­வி­டு­வார்.

"நல்ல படம் எடுத்­துள்­ளோம். அது வெற்றி பெறும் என நம்­பு­கிறோம். ரசி­கர்­க­ளுக்கு நல்ல விருந்து காத்­தி­ருக்­கிறது. என்­னி­டம் பெரிய அள­வில் பணம் இல்லை. என்­னு­டைய வரு­மானத்தை மக்­க­ளுக்­கா­கப் பயன்­படுத்­து­வேன்.

"மறைந்த முதல்­வர் கரு­ணா­நிதி பிறந்­த­நா­ளில் இந்­தப் படம் வெளி­யா­வது எதிர்­பா­ரா­மல் நடந்­தது. என் திற­மையை வளர்த்துக் கொள்ள முன்­னோ­டி­யாக இருந்­த­தில் கரு­ணா­நி­தி­யும் ஒரு­வர்.

"தற்­செ­ய­லாக ஒரு­வி­ஷ­யம் நடந்­துள்­ளது என்­ற­போ­தி­லும் அதில் எனக்கு மகிழ்ச்­சி­தான்," என்­றார் கமல்­ஹா­சன்.

'இந்­தி­யன் 2' படம் குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல் அளித்த அவர், தாம் நடித்த படங்­களின் பட்­டி­ய­லில் அது­வும் இடம்­பெ­றும் என்­றார்.

'விக்­ரம்' படத்­தில் 'பத்­தல பத்தல' பாட­லில் ஒன்­றி­யம் என்ற வார்த்தை இடம்­பெற்­றது விவா­தப் பொரு­ளாகி உள்ள நிலை­யில், அது­கு­றித்­தும் விளக்­கம் அளித்­தார் கமல்.

"தமி­ழில் ஒரு வார்த்­தைக்­குப் பல அர்த்­தங்­கள் சொல்­ல­லாம். ஒன்­றி­யம் என்ற வார்த்­தைக்­கும் அப்­ப­டிப் பல அர்த்­தங்­கள் உள்­ளன. செய்­தி­யா­ளர்­கள் இணைந்­துள்ள இந்­தக் கூட்­டம்­கூட ஒன்றியம்தான். இயக்­கு­நர்­கள், தயா­ரிப்­பா­ளர்­கள் வைத்­துள்ள சங்­கம்­கூட ஒன்றி­யம்தான். படம் வெளி­வந்தபிறகு, இதற்­கான அர்த்­தங்­கள் தெரி­யும்," என்­றார் கமல்.

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!