'ஸ்ரீதேவியை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்'

'ஸ்ரீதேவியை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்'

2 mins read
fd1c84ec-7e06-458d-acf7-94148b98aaa0
-

தன்னை தனி நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்து திரைப்­ப­டம் தயா­ரிப்­ப­வர்­க­ளுக்கு நஷ்­டம் ஏதும் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்­ப­தில் தாம் மிகுந்த கவ­னத்­து­டன் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் டாப்சி.

இந்­தித் திரை­யு­ல­கில் முன்­னணி நாய­கி­யாக வளர்ந்து வரும் இவர், சொந்­தப் பட நிறு­வ­னம் மூலம் சில திரைப்­படங்­க­ளைத் தயா­ரிக்­க­வும் செய்­கி­றார்.

"ஒரு தயா­ரிப்­பா­ள­ருக்கு என்­னென்ன சிர­மங்­கள் ஏற்­படும் என்­பதை நான் நன்கு அறிந்­துள்­ளேன். இத்­தனை ஆண்டு கால அனு­ப­வத்தை துணை­யா­கக் கொண்­டு­தான் படத்­த­யா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளேன். நாய­கி­களை மைய­மாக வைத்து உரு­வா­கும் படம் என்­ப­தால் தயா­ரிப்­புச்­செ­ல­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் எனக்கு உடன்­பா­டில்லை. மேலும், நாயகி மட்­டுமே இருந்­தால் வசூல் அதி­க­ரிக்­காது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அத்­த­கைய படங்­களை முன்­னணி நாய­கன் அல்­லது இயக்­கு­நர் தயா­ரிப்­ப­தாக அறி­விக்­கின்­ற­னர்.

"தனி நாயகி நடிக்­கும் படங்­க­ளுக்கு இவ்­வாறு நட்­சத்­திர அந்­தஸ்­தைப் பெறு­வ­து­தான் படத்­தின் வெற்­றிக்கு உத­வும் என்ற நிலையை மாற்ற விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் டாப்சி.

தனது படங்­கள் வசூல் ரீதி­யில் வெற்றி பெறு­வது முக்­கி­யம் என்று கூறு­பவர், ஒவ்­வோர் ஆண்­டும் நடிக்­கும் படங்­களின் எண்­ணிக்கை குறைந்­தா­லும் பர­வா­யில்லை. அவை தர­மா­க­வும் வசூ­லில் சாதிப்­ப­தா­க­வும் இருக்க வேண்­டும் என்­கி­றார். தற்­போது ஷாரூக் கானு­டன் இணைந்து ஒரு படத்­தில் நடிக்­கி­றார். சிறு வயது முதலே இவர் ஷாரூக்­கின் தீவிர ரசி­கை­யாம். அவ­ரு­டன் இணைந்து நடிப்­பது கன­வு­போல் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"தனி நாய­கி­யாக நடித்து வெற்றி பெறு­வது அவ்­வ­ளவு எளி­தல்ல. கடந்த 12 ஆண்­டு­க­ளாக திரை­யு­ல­கில் இருக்­கி­றேன். இது ஆணா­திக்­கம் உள்ள துறை. தற்­போது நான், ரகுல் பிரீத் சிங், பூஜா ஹெக்டே ஆகி­யோர் மொழி­க­ளைக் கடந்து நடித்து வரு­கி­றோம். நடிக்­க வந்த புதிதில் மொழி­யால் ஏற்­ப­டக்­கூ­டிய தடை­களைக் கடக்க சிர­மப்­பட்­டேன்.

"தென்­னிந்­திய நடிகை என்று இந்­தித் திரை­யுலகில் முத்­திரை குத்­தப்­பட்­டேன். எதன் அடிப்­ப­டை­யில் இப்­ப­டிச் செய்­கி­றார்­கள் எனத் தெரி­ய­வில்லை. ரசி­கர்­கள் மனதில் உள்ள அந்த எண்­ணத்தை மாற்ற சிர­மப்­பட்­டேன். ஸ்ரீதேவி போன்ற ஒன்­றி­ரண்டு பேரை மட்­டுமே இந்­தியா முழு­வ­தும் உள்ள ரசி­கர்­கள் ஏற்­றுக்­கொண்­ட­தா­கச் சொல்­லலாம். என்­னை­யும் அவ்­வ­ளவு எளி­தில் ஏற்­றுக்­கொள்ள நான் ஒன்­றும் ஸ்ரீதேவி அல்ல. இதை உணர்ந்­த­தால்­தான் திரை­யு­ல­கில் தாக்­குப்­பி­டிக்க முடி­கிறது," என்­கி­றார் டாப்சி.

டாப்சி

பன்னு

, :   