சூர்யா: மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்

சூர்யா: மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்

1 mins read
5fe7b087-8a58-4620-9396-6cd693514df3
-

நடி­கர் சூர்­யா­வுக்­கும் இயக்­கு­நர் பாலா­வுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் இதன் கார­ண­மாக இரு­வ­ரும் இணைந்து பணி­யாற்றி வந்த படம் கைவி­டப்­பட்­ட­தா­க­வும் அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில், அத்­த­க­வல் உண்­மை­யல்ல என்று தமது டுவிட்­டர் பதி­வின் மூலம் ரசி­கர்­க­ளுக்கு உணர்த்தி உள்­ளார் சூர்யா.

இரு­வ­ரும் பல ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மீண்­டும் இணைந்­துள்ளது­டன், இப்­பு­திய படத்­துக்கு ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைக்­கி­றார் என்­பதும் ரசி­கர்­களை உற்­சா­கப்­படுத்தி உள்­ளது.

'சூர்யா 41' என தற்­கா­லி­க­மாக பெய­ரி­டப்­பட்­டுள்ள இப்­ப­டத்­தில், கிரித்தி ஷெட்டி நாய­கி­யாக நடிக்­கி­றார். சூர்­யா­வின் '2டி' நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது.

அண்­மை­யில், இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு கன்­னி­யா­கு­ம­ரி­யில் தொடங்கி முழு வீச்­சில் நடை­பெற்று வந்­தது. இந்­நி­லை­யில், குறிப்­பிட்ட ஒரு சிறிய காட்­சி­யைப் பட­மாக்­கி­ய­போது பாலா­வுக்­கும் சூர்­யா­வுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

அந்­தக் காட்­சிக்­காக காலை முதல் மதி­யம் வரை கடும் வெயி­லில் சூர்யா திரும்­பத்­திரும்ப நடித்­த­தா­க­வும் அப்­போ­தும்­கூட அந்­தக்­காட்சி பட­மாக்­கப்­பட்­டது மன­நி­றைவு தர­வில்லை என பாலா கூறி­ய­தா­க­வும் தெரி­கிறது. இத­னால் ஒரு கட்­டத்­தில் இயக்­கு­நர் உட்­பட யாரி­ட­மும் சொல்­லிக்­கொள்­ளா­மல் சூர்யா கிளம்­பிச் சென்­று­விட்­ட­தா­கப் பேசப்­பட்­டது. இந்­நி­லை­யில், 'சூர்யா 41' படப்­பி­டிப்பு மீண்­டும் தொடங்­கு­வ­தற்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தாக சூர்யா டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். மேலும், படப்­பி­டிப்­பின்­போது பாலா­வும் அவ­ரும் பேசிக்கொண்­டி­ருக்­கும் புகைப்­ப­டத்­தை­யும் அவர் பகிர்ந்­துள்­ளார்.

படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவுடன் சூர்யா.