விரைவில் திரை காண்கிறது 'பிசாசு-2'

விரைவில் திரை காண்கிறது 'பிசாசு-2'

1 mins read

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பிசாசு-2' படத்தின் பின்னணிக் குரல் பதிவுப் பணியை முடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படம் விரைவில் நான்கு மொழிகளில் திரைகாண உள்ளது.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

நமீதா, பூர்ணா, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். அண்மையில் வெளியான அப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.