தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி, கமலை இணைக்கும் கதை தயார்

1 mins read
1a6f0f1a-99ac-4da4-bb74-d4a1a3f1ec08
-

ரஜினி, கமல் ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களையும் இணைந்து நடிக்க வைப்பதற்கேற்ற கதையை தாம் தயார் செய்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். 'பிரேமம்' மலையாளப் படத் தின் மூலம் இந்திய சினிமா உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். தற்போது பிருத்விராஜ், நயன்தாரா நடித்துள்ள 'கோல்ட்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று பலமுறை கூறியுள்ளார் அல்போன்ஸ் .

"கமல், ரஜினி இருவருக்கும் ஏற்ற ஒரு கதையை உருவாக்கி உள்ளேன். இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அந்தக் கதையைக் கூறுவேன். இரு வருக்கும் அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்," என்கிறார் அல்போன்ஸ் புத்ரன்.