மருத்துவமனையில் 'போண்டா' மணி

1 mins read
7eb5ed50-5a59-459a-98c1-8752ad2233f5
-

பிர­பல நகைச்­சுவை நடி­கர் போண்டா மணி இரு­தய நோய் கார­ண­மாக சென்­னை­யில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

'ரன்', 'சுந்­தரா டிரா­வல்ஸ்', 'வின்­னர்', 'திரு­மலை' உள்­ளிட்ட ஏரா­ள­மான படங்­களில் நடித்­துள்­ளார் போண்டா மணி.

இலங்­கையைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட இவர் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்றி வந்­தார். அப்­போது இயக்­கு­நர் பாக்­ய­ராஜை சந்­திக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அவ­ரது இயக்­கத்­தில் உரு­வான 'பவுனு பவு­னு­தான்' படம் மூலம் திரையுலகில் அறி­மு­க­மா­னார் போண்டா மணி.

இந்­நி­லை­யில், திடீ­ரென உடல்­நலம் குன்­றிய அவ­ருக்கு மருத்­துவ பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன. இதில் அவர் இரு­தய நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.