சுரேஷ் சக்கரவர்த்தி: சாதி குறித்து பேசவே மாட்டேன்

சுரேஷ் சக்கரவர்த்தி: சாதி குறித்து பேசவே மாட்டேன்

1 mins read
7a4449d3-4f90-4d80-9d4a-579a47eb9c7a
நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. -

"ஒரு­வ­ரைப் பார்த்­த­தும் நீங்க என்ன சாதி என்று கேட்­கும் பழக்­கம் எல்­லாம் எனக்கு இல்லை. இப்­போது மட்­டு­மல்ல எப்­போ­துமே நான் இப்­ப­டித்­தான்," என்று கோபத்­தில் பொங்­கு­கி­றார் சுரேஷ் சக்­க­ர­வர்த்தி.

பிக்­பாஸ் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பிறகு இவ­ரைத் தெரி­யா­த­வர்­களே இல்லை என்­றா­கி­விட்­டது. பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே சின்­னத்­திரை, வெள்­ளித்­திரை என இரண்­டி­லும் அசத்­தி­ய­வர்.

இப்­போது மீண்­டும் ஒரு வெற்றி வலம் வந்­து­கொண்­டி­ருக்­கி­றார். 'நெஞ்­சுக்கு நீதி' படத்­தில் இவ­ரது வில்­லத்­த­னம் பார்த்­த­வர்­களை மிரள வைத்­தி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில், சுரேஷ் சக்­க­ர­வர்த்தி சாதி, மதம் பார்த்து பழ­கக்­கூ­டி­ய­வர் என்ற முணு­மு­ணுப்பு எழுந்­துள்­ளது. இது­கு­றித்து கேட்­டால், தனக்கே உரிய இயல்­பு­டன் மனி­தர் பொரிந்து தள்­ளு­கி­றார்.

"நான் யார் என்­பது எனக்­குத் தெரி­யும். சிறு வயது முதல் இப்­போது வரை சாதி இல்லை என்று சொல்லி வளர்க்­கப்­பட்­டுள்­ளோம். எங்­கள் வீட்­டில் எப்­போ­துமே சமத்­து­வம் இருக்­கும். வீட்­டில் வேலை செய்­ப­வர்­க­ளைக்­கூட பெயர் சொல்­லிக் கூப்­பி­டா­மல் அண்ணா என்று­தான் அழைப்­போம். வா, போ என்று குறிப்­பிட அனு­மதி இல்லை. குழந்­தை­யாக இருந்­தா­லும் கூட மரி­யாதை தர வேண்­டும்.

"நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் உரி­மை­யோடு ஒரு­மை­யில் பேசி­னா­லும் அக்கா திட்­டு­வார். எனக்­குத் தெரிந்து ரஜினி, கமல் சாரெல்­லாம் கூட சாதா­ரண ஆள்­களை வாங்க, போங்க என்­று­தான் கூப்­பி­டு­வார்­கள்.

"அப்­படி இருப்­பது பெரிய விஷ­யம் என நினைக்கிறேன். எனக்கு ஒரு­வ­ரி­டம் சாதியை விசா­ரிக்­கும் பழக்­கம் எல்­லாம் அறவே கிடை­யாது," என்­கி­றார் சுரேஷ் சக்­க­ர­வர்த்தி.