'எனக்கு திரைப்படங்கள் செய்யாததை சின்னத்திரை செய்துள்ளது'

'எனக்கு திரைப்படங்கள் செய்யாததை சின்னத்திரை செய்துள்ளது'

2 mins read
98c31370-8a61-48e3-8fb5-5cc2e91fc416
தன் தந்தையும் நடிகருமான கணேஷ் ராமுடன் வித்யுலேகா. -

சத்­த­மில்­லா­மல் 75 படங்­களில் நடித்து முடித்­துள்­ளார் வித்­யு­லேகா. நகைச்­சுவை, குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருப்­ப­வ­ருக்கு இப்­போது தமி­ழில் சொல்­லிக்கொள்­ளும்­படி வாய்ப்­பு­கள் இல்லை.

ஆனால் சின்­னத்­தி­ரை­யில் ஒளி­ப­ரப்­பா­கும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தன்னை பட்டி தொட்டி எல்­லாம் கொண்டு சேர்த்­தி­ருப்­ப­தா­கச் சொல்லி பூரித்­துப்போகி­றார் வித்யுலேகா.

"கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தமிழ்த் திரைப்­ப­டங்­களில் என்­னைப் பார்த்­த­வர்­க­ளுக்கு குண்­டுப் பெண்­ணா­கத்­தான் நினை­வுக்கு வரு­வேன். இல்­லை­யென்­றாம் சந்­தா­னம் கூட நடித்­த­வர், அந்­தப் படத்­தில் நடித்­த­வர் என்று குறிப்­பி­டு­வார்­கள். என்னை அடை­யா­ளம் கண்டு கொண்­டா­லும், என் பெயர்­கூட பல ரசி­கர்­க­ளுக்­குத் தெரி­யாது.

"ஆனால் 'குக் வித் கோமாளி' என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி என்­னைப் பிர­ப­ல­மாக்கி உள்­ளது. குக்­கி­ரா­மத்­தில் உள்­ள­வர்­கள்­கூட என் பெய­ரைச் சொல்­கி­றார்­கள். சமூக ஊட­கங்­களில் என்­னைப் பற்றி நிறைய பேசு­கி­றார்­கள். என் படங்­களை வைத்து 'மீம்'கள் வெளி­யா­கின்­றன. இதை­யெல்­லாம் பார்க்­கும்­போது பூரித்­துப்­போ­கி­றேன்.

"எல்­லா­ரும் என் பெய­ரைச் சொல்லி அழைப்­ப­தைப் பெரிய வெற்­றி­யா­கப் பார்க்­கி­றேன். இந்­தப் போட்டி நிகழ்ச்­சி­யில் நான் வெற்றி பெறு­வேனா என்­பது தெரி­யாது.

"ஆனால் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளி­டம் என்­னைக் கொண்­டு­போய்ச்­சேர்த்­தி­ருக்­கிறது. சினிமா செய்­யா­ததை சின்­னத்­திரை செய்­துள்­ளது," என்­கி­றார் வித்­யு­லேகா.

ஆச்சி மனோ­ரமா, கோவை சரளா போன்று பெய­ரெ­டுக்க வேண்­டும் என்­ப­து­தான் தனது ஆசை, லட்­சி­யம் என்று குறிப்­பி­டு­ப­வர், தமி­ழில் உரிய வாய்ப்­பு­கள் கிடைக்­கா­மல் எப்­ப­டிச் சாதிக்க முடி­யும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்.

"ஆச்சி, சரளா மேடம் போன்­ற­வர்­களை மன­தில் வைத்து, தனி­யாக நகைச்­சுவை பகு­தி­களை உரு­வாக்­கி­னார்­கள். ஆனால் இப்­போது நிலைமை மாறி­விட்­டது. ஒரு நகைச்­சுவை நடி­கரை மட்­டும் வைத்து முழுப் படத்­தை­யும் முடித்­து­வி­டு­கி­றார்­கள். இந்த நிலைமை மாற வேண்­டும்," என்று ஆதங்­கப்­படும் வித்­யு­லே­கா­வுக்­குத் திரு­ம­ண­மா­கி­விட்­டது.

இடை­யில் கொஞ்ச காலம் உடல் இளைத்­தி­ருந்­த­வர், தொலைக்­காட்சி நிகழ்ச்­சிக்­காக மீண்­டும் நன்­றா­கத் சாப்­பி­டத் தொடங்கி, கொஞ்­சம் எடை கூடி­விட்­டா­ராம். நகைச்­சுவை நடி­கை­க­ளுக்­கும் அதிக வாய்ப்­பு­கள் தர வேண்­டும் என்று கோரிக்கை வைக்­கி­றார் வித்­யுலேகா.