இரு பாகங்களாக தயாராகிறது 'விடுதலை'

இரு பாகங்களாக தயாராகிறது 'விடுதலை'

1 mins read

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் 'விடுதலை' படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மூன்று மாத இடைவெளியில் இரு பாகங்களும் வெளியாகுமாம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி சிறிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பின்போது கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டதில் அவரது பாத்திரமும் முக்கியத்து வம் வாய்ந்ததாக மாறிவிட்டது. படமும் நீளமாகிவிட்டது.

எனவே எந்தக் காட்சியையும் நீக்காமல் படத்தை இரு பாகங்க ளாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.