நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் எதிர்வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தகவலை தமிழக ஊடகத்திடம் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
முன்பே வெளியான தகவலின்படி திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 150 விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்க இயலாது என அக்கோவில் நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தகவல்.
அதனால் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் இயங்கும் சொகுசு தங்கு விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண நிகழ்வை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. இதற்கான உரிமம் பெருந்தொகைக்கு விலை போயுள்ளது.
இருவருக்கும் நெருக்கமான நண்பர்களும் சில உறவினர்களும் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

