சல்மான் கான் ஜோடியாக தாம் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றி வெளிவரும் பொய்யான தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஊடகத்தில், 56 வயதான சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார் மாளவிகா என்று அண்மையில் ஒரு தகவல் வெளியானது. வாய்ப்புகள் இல்லாததால் வயதான நடிகருடன் நடிப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். இதையடுத்தே விளக்கம் அளித்துள்ளார் மாளவிகா.

