மூன்றாண்டு இடை வெளிக்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதா. இந்நிலையில் எப்போது திருமணம் என்று செய்தி யாளர் ஒருவர் கேட்டபோது, அது குறித்து யோசிக்கவே இல்லை என்றாராம். சதாவுக்கு இப்போது 37 வயதாகிறது. தனக்கு ஏற்ற பொருத்தமான ஒருவரை சந்திக்கும்போது திருமணம் செய்து கொள்ளப்போவதாகச் சொல்கிறார். சதா கடைசியாக நடித்த 'டார்ச்லைட்' என்ற படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. அதில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தவர், மீண்டும் கனமான பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளார் திரிஷா. கடந்த இருபது ஆண்டுகளாக நடித்து வந்தாலும் இப்போதுதான் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது என்று தோழிகளிடம் சொல்லி மகிழ்கிறாராம். தற்போது நடித்து வரும் 'தி ரோட்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மோகன்லால் படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் திரிஷா. இது ஜீத்து ஜோசப் இயக்கும் படம்.
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்துக்கு 'அதிகாரி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.
'காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இதுவரை ரூ.66 கோடி வசூல் கண்டுள்ளது.
கேரள அரசு அண்மையில் மாநிலத் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இம்முறை ராகுல் சதாசிவம் இயக்கிய 'பூதகாலம்' படத்தில் நடித்த ரேவதி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
சுந்தர் சி, குஷ்பு தம்பதியரின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க உள்ளார். இத்தகவலை குஷ்பு தெரிவித்துள்ளார். "என் மகள் லண்டனில் தன் படிப்பை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து அவர் சினிமாவில் தன் பயணத்தைத் தொடங்க உள்ளார். அவருக்காக நான் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அவருக்கு வேண்டும்," என குஷ்பு தெரிவித்துள்ளார்.

