சிம்பு பட வெளியீட்டு உரிமை பெற போட்டி

1 mins read
a45b4247-dc0f-43f8-9e4d-328d8e9becd1
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு, கயட் லோஹர். -

கௌதம் மேனன் இயக்­கத்­தில் சிம்பு நடித்­துள்ள 'வெந்து தணிந்­தது காடு' படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பை ஜூன் மாதத் தொடக்­கத்­தில் வெளி­யி­ட­லாம் என்று திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

ஆனால், சிம்­பு­வின் தந்தை டி.ராஜேந்­த­ரின் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­தால் திட்­டத்தை மாற்­றி­விட்­ட­னர்.

வெளி­நாட்­டில் சிகிச்சை பெற இருக்­கும் தந்­தை­யு­டன் சிம்­பு­வும் செல்ல இருக்­கி­றார். அத­னால் அவர் நாடு திரும்­பிய பிற­கு­தான் மற்ற நிகழ்­வு­க­ளுக்கு திட்­ட­மி­டப் போகி­றார்­க­ளாம்.

இதற்­கி­டையே, எடுக்­கப்­பட்ட காட்­சி­க­ளைப் பார்த்த படத்­தின் தயா­ரிப்­புத்­த­ரப்பு அசந்து போன­தா­கத் தக­வல். அந்த அள­வுக்கு சிம்­பு­வும் கௌதம் மேன­னும் மிகச் சிறப்­பாக பணி­யாற்றி இருப்­ப­தாக பாராட்டு கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், படத்­தின் வெளி­யீட்டு உரி­மை­யைப் பெறு­வ­தில் கடும் போட்டி நில­வு­வ­தா­கத் தக­வல். ஒரு­வ­ரை­யொ­ரு­வர் முந்­திக்­கொண்டு விலையை உயர்த்தி வரு­வ­தால் படக்­கு­ழு­வி­னர் உற்­சா­கத்­தில் உள்­ள­னர்.

"சரி­யா­கச் சொல்­வ­தா­னால், சிம்பு இது­வரை நடித்த படங்­க­ளி­லேயே மிக அதிக தொகைக்கு வியா­பா­ர­மான பட­மாக 'வெந்து தணிந்­தது காடு' இருக்­கும்.

"சினிமா சந்­தை­யில் அவ­ரது மவுசு மீண்­டும் உயர்­வ­தற்கு 'மாநாடு' பட வெற்­றி­தான் கார­ணம்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'காலத்­துக்­கும் நீ வேணும்' எனத் தொடங்­கும் பாடல் அண்­மை­யில் யூடி­யூப்­பில் வெளி­யா­னது. இது­வரை அப்­பா­டல் ஒரு கோடி பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளது. ஏ.ஆர்.ரகு­மான் இசை­யில் இப்­பா­டலை தாமரை எழு­தி­யுள்­ளார். இதை­ய­டுத்து, மேலும் ஒரு பாடலை விரை­வில் வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இப்­ப­டத்­தில் சிம்­பு­வுக்கு ஜோடி­யாக கயட் லோஹர் என்ற புதுமுகம் நடிக்­கி­றார்.