விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகி உள்ளது. அதிரடி, சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தத் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. டி.சிவா தயாரித்துள்ள இப்படத்தை, 'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் இயக்கி உள்ளார். முக்கிய காட்சிகளை கோல் கத்தாவிலும் ஐரோப்பாவிலும் படமாக்கி உள்ளனர். அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், சென்றாயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடும் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
எதிர்பார்ப்பு அதிகரிப்பு
1 mins read
-

