திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read

 நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மிக நெருக்கமான 250 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்பார்கள் என்றும் திருமண வரவேற்பு எப்போது என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், திருமணத்துக்கு முன்பு தனது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நயன்தாரா தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

 அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கியாரா பெரிய தொகையை சம்பளமாக கேட்டபோதும் தயாரிப்புத்தரப்பு யோசிக்க வில்லையாம். எனினும், கியாரா தரப்பில் கால்ஷீட் பிரச்சினை உள்ளதால் சில நாள்கள் பொறுத்திருந்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 'விருமன்' படத்தில் அதிதி சங்கரின் நடனம் அற்புதமாக இருப்பதாக பாராட்டி உள்ளார் எஸ்ஜே. சூர்யா. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கஞ்சாப்பூவு கண்ணாலே' எனத் தொடங் கும் பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளையொட்டி கடந்த 25ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டு, இதுவரை ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாடலுக்கு அதிதி நடனமாடியதைப் பார்க்கும்போது அவர் புதுமுகம் என்பதை நம்பவே முடியவில்லை என்று எஸ்ஜே.சூர்யா பாராட்டி உள்ளார்.