ஜி.வி. பிரகாஷ் மனதை மாற்றிய கதை

ஜி.வி. பிரகாஷ் மனதை மாற்றிய கதை

1 mins read
c1dc933f-73bc-4357-9d06-09e9ef0ad2a5
'13' படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது அப்படக்குழுவினர். -

நகைச்­சு­வை­யும் திகி­லும் கலந்த கதை­களில் நடிப்­ப­தில்லை என்று தாம் முடிவு செய்­தி­ருந்த நிலை­யில், '13' படத்­தின் கதை அந்த எண்­ணத்தை மாற்­றி­விட்­டது என்­கி­றார் ஜி.வி.பிர­காஷ்.

விவேக் இயக்­கத்­தில் ஜி.வி.பிர­காஷ், கௌதம் வாசு­தேவ் மேனன் இணைந்து நடித்­துள்ள படம் '13'. இப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யாளர்­களைச் சந்­தித்­துப் பேசி­னர்.

அப்­போது பேசிய ஜி.வி.பிர­காஷ், தம்­மு­டைய முதல் பட­மான 'டார்­லிங்' திகில் கதை பாணி­யில் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்றும் அதன் பிறகு திகில் கதை கொண்ட திரைப்­ப­டங்­களில் நடிப்­பதை தவிர்த்­து­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"தற்­போ­தைய சூழ­லில் வாரம் ஒரு திகில் திரைப்­ப­டம் வெளி­யா­கிறது. அவை அனைத்­தும் ஒரே மாதிரியாக உள்­ளன. எனவே '13' படத்­த­யா­ரிப்­பா­ளர் கதை கேட்க வலி­யு­றுத்­தி­யபோது, திகில் திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தில்லை என்­றேன். குறிப்­பாக திகி­லும் நகைச்­சு­வை­யும் கொண்ட படம் என்­றால் அறவே நடிக்க மாட்­டேன் என்று கூறி­னேன். ஆனால் இந்­தக் கதையைக் கேட்­ட பிறகு உடனடி­யாக நடிக்க சம்­ம­தம் தெரி­வித்து நடித்­தேன். அந்த அள­வுக்கு கதை சுவா­ர­சி­ய­மாக இருந்­தது," என்­றார் ஜி.வி.பிர­காஷ். இப்­படத்­தின் இசை வெளி­யீட்டு விழா விரை­வில் நடை­பெற உள்­ளது.