தனது தீவிர ரசிகர் விபத்தில் பலியானதை அடுத்து நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் சூர்யா.
27 வயதான ஜெகதீஷ் என்ற அந்த ரசிகருக்குத் திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
சூர்யா ரசிகர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்தார் ஜெகதீஷ். இந்நிலையில், நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு திடீரென சென்ற சூர்யா, அவரது உருவப் படத்தை வணங்கி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி, குழந்தைக்கு ஆறுதல் கூறியபோது சூர்யா கண்கலங்கினார்.

