சமூக ஊடகங்களை ஆதரிக்கும் கதாநாயகி

சமூக ஊடகங்களை ஆதரிக்கும் கதாநாயகி

2 mins read
cdf7428e-a8f4-4e4e-96ca-f927a89d2f3b
-

'ருத்­ர தாண்­ட­வம்' படத்­தின் மூலம் தமிழ் சினி­மா­வின் இளை­யர்­களை வளைத்­துப்­போட வந்­தி­ருக்­கி­றார் தர்ஷா குப்தா. தமிழ், மலை­யா­ளம், ஆங்­கி­லம் எனப் பல மொழி­களில் பேசி அசத்­து­கி­றார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக சில தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்து வந்­த­வ­ருக்கு, சமூக ஊடக உல­கில் நுழைந்த­தும் பலத்த வர­வேற்பு. அதன் பல­னாக சினிமா வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன.

"பெண்­கள் இப்­போது சமூக ஊட­கங்­களை தங்­க­ளு­டைய சுய முன்­னேற்­றத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். பல பெண்­கள் தங்­க­ளு­டைய கைவி­னைப் பொருள்­களை விற்­ப­னை செய்­கி­றார்­கள். போட்­டித் தேர்­வு­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கும் வகுப்­பு­கள் நடை­பெ­று­கின்­றன.

"எங்­க­ளைப் போன்று மாட­லிங், திரைப்­ப­டத் துறை­யில் இருப்­ப­வர்­கள் ரசி­கர்­க­ள் மனம் கவர சில புகைப்­ப­டங்­களை, கருத்­து­க­ளைப் பதி­வி­டு­கி­றோம்," என்­கி­றார் தர்ஷா.

கொரோனா முடக்க நிலை­யின்­போது சமூக ஊட­கங்­களில் இவர் வெளி­யிட்ட புகைப்­ப­டங்­க­ளுக்குப் பலத்த வர­வேற்பு கிடைத்­தது. ஒவ்­வொரு புகைப்­ப­டத்­தை­யும் குறைந்­த­பட்­சம் ஐம்­ப­தா­யி­ரம் பேர் பார்த்­துள்­ள­னர்.

"எனது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வு­க­ளைப் பார்த்த பிறகே தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க அழைப்பு வந்­தது. சமூக ஊட­கங்­களைச் சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்­திக் கொண்­டால் நமக்கு நிச்­ச­யம் பலன் உண்டு," என்று சொல்­லும் தர்ஷா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தம்மை மேலும் பிர­ப­ல­மாக்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

சமை­யல் என்­கிற சுமையை இல­கு­வாக எடுத்­துக்­கொள்­ள­லாம் என்று திரை­யில் காட்­டி­ய­தால்­தான் இந்த நிகழ்ச்­சிக்­குப் பெண்­களிடம் நல்ல வர­வேற்பு கிடைப்­ப­தா­கக் கூறு­ப­வர், அந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பின்­னர்­தான் திரைத்­து­றை­யி­லும் தமக்­கான வாய்ப்­பு­கள் தேடி வரு­கிறது என்­கி­றார். தர்­ஷாவை பாதி மலை­யாளி, பாதி தமிழ்ப் பெண் என்று குறிப்­பி­ட­லாம். இவ­ரது தந்தை கேர­ளா­வின் பாலக்­காடு பகு­தி­யைச் சேர்ந்­த­வர். தாயா­ருக்­குச் சொந்த ஊர் கோயம்­புத்­தூர்.

பிறந்­தது, வளர்ந்­தது, படித்­தது எல்­லாமே கோவை­யில் தானாம். கணி­னித் தொழில்­நுட்­பத்­தில் இளங்­கலை பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு, பெங்­க­ளூ­ரு­வில் எம்­பிஏ பட்ட மேற்­ப­டிப்பை முடித்­துள்­ளார். அதன் பிறகு பெரிய பள்­ளி­யில் கணினி ஆசி­ரி­யை­யாக வேலை பார்த்­த­வ­ருக்கு அந்த அனு­ப­வம் மிக­வும் பிடித்­துப்­போ­னது.

"ஆசி­ரி­யை­யாக மகிழ்ச்­சி­யா­க வேலை செய்து வந்­தேன். நவீன நாக­ரிக உடை­கள் எந்த அள­வுக்­குப் பிடிக்­குமோ, அதே அள­வுக்கு சேலை­கள் அணி­வ­தும் பிடிக்­கும்.

"ஒரு­முறை சென்­னை­யில் உள்ள தோழி­யைச் சந்­திக்க வந்­தி­ருந்­தேன். அவ­ரது பக்­கத்து வீட்­டில் இருந்த பெண்­மணி மாட­லிங் துறை­யைச் சேர்ந்­த­ஆவர். என்­னைப் பார்த்த­தும் மாட­லிங் நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க விருப்­பமா என்று அவர் கேட்க, விடு­முறை நாள்­களில் மட்­டும் வரு­கி­றேன் என்று நான் பதில் சொல்ல, விளம்­ப­ரத்­து­றை­யில் நுழைய எனக்­கான கத­வு­கள் திறந்­தன," என்­கி­றார் தர்ஷா.

அதன் பிறகு பல்­வேறு விளம்­ப­ரங்­களில் நடித்து பெயர் வாங்­கிய இவ­ருக்கு, 2019ல் 'அவ­ளும் நானும்' என்ற தொட­ரில் நாய­கி­யாக நடிக்­கும் வாய்ப்பு தேடி­வந்­துள்­ளது. பிறகு 'முள்­ளும் மல­ரும்', 'செந்­தூ­ரப்­பூவே', 'மின்­னலே' என்று பல தொடர்­களில் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

தற்­போது 'ஓ மை கோஸ்ட்' படத்­தில் கல்­லூரி மாணவி யாக, கதையை நகர்த்­திச் செல்­லும் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து முடித்­துள்­ளார் தர்ஷா.