சூர்யா, விஜய்யுடன் இணைய விரும்பும் கமல்

சூர்யா, விஜய்யுடன் இணைய விரும்பும் கமல்

2 mins read
0b9d4b23-310f-4e96-aa88-2428875914be
-

'விக்­ரம்' படத்தின் மூன்­றா­வது பாகத்­தில் சூர்யா நடிக்க இருப்­ப­தாக சூசகமாகத் தெரி­வித்­துள்­ளார் கமல்­ஹா­சன்.

நேற்று முன்­தி­னம் 'விக்­ரம்' படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் நிகழ்வு மலே­சி­யா­வில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்ட அவர் முன்­ன­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது செய்­தி­யா­ளர் ஒரு­வர், 'விக்­ரம்' படத்­தின் மூன்­றா­வது பாகத்­தில் விஜய்யை எதிர்­பார்க்­க­லாமா? என்று கேட்­டார்.

அதற்கு சிரித்­துக்­கொண்டே பதி­ல­ளித்த அவர், அந்­தப் படத்­திற்­காக ஏற்­கெ­னவே ஒரு­வரை ஒப்­பந்­தம் செய்து வைத்­துள்­ளோம் என்­றார்.

அந்த நாய­கன் சூர்­யாவா? என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, கமல் அதை மறுக்­க­வில்லை.

'விக்ரம்' படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கும் படத்தின் மூன்றாம் பாகத்துக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகத் தகவல்.

இந்­நி­லை­யில், விஜய் ஒப்­புக் கொண்­டால் அவரை வைத்து படம் தயா­ரிக்க தனது ராஜ்­க­மல் பிலிம்ஸ் நிறு­வ­னம் தயா­ராக உள்­ளது என்­றும் கமல் கூறி­னார்.

இயக்­குநர் லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் நடி­கர் கமல்­ஹா­சன், விஜய் சேது­பதி, பகத் ஃபாசில் ஆகி­யோர் நடிப்­பில் உரு­வா­கி உள்ளது 'விக்­ரம்' திரைப்­ப­டம்.

இதற்­கி­டையே, தமி­ழில் முன்­னணி­யில் உள்ள அனைத்து கதா­நா­ய­கர்­க­ளி­ட­மும் கால்­ஷீட் கேட்டுள்­ளா­ராம் கமல்.

அவ­ரது படத்­த­யா­ரிப்பு நிறு­வனம் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் நிறைய படங்­களைத் தயா­ரிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வி­ஷ­யத்­தைக் கேள்­விப்­பட்ட நடி­கர் ஜெயம் ரவி, உட­ன­டி­யாக தாமே கமலை தொடர்­பு­கொண்டு கால்ஷீட் தரு­வ­தா­கக் கூறி­னா­ராம். அவருக்கு கமல் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

'விக்ரம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் கமல்.