தயாரிப்பாளர்: 'மாநாடு' பட வசூல் ரூ.117 கோடி

தயாரிப்பாளர்: 'மாநாடு' பட வசூல் ரூ.117 கோடி

1 mins read
c39d6497-87d7-4515-ad19-389ee4cd0623
'மாநாடு' படத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன். -

சிம்பு நடித்­துள்ள 'மாநாடு' படம் உல­கெங்­கும் 117 கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ளது. இத்­த­க­வலை அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி தெரி­வித்­துள்­ளார்.

வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் சிலம்­ப­ர­சன் நடிப்­பில் வெளி­யான 'மாநாடு' படம், நீண்ட இடை­வெளிக்­குப் பிறகு சிம்­பு­வுக்கு வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­தது.

தற்­போது நூறு கோடி ரூபாய்க்­கும் மேல் வசூல் காணும் படங்­களில் நடித்­த­வர்­க­ளின் சம்­ப­ளம்­தான் உட­னுக்­கு­டன் அதி­க­ரித்து வரு­கிறது.

அந்த வகை­யில், அஜித் நடித்த 'வலிமை', விஜய் நடித்த 'பீஸ்ட்' ஆகிய படங்­கள் இரு­நூறு கோடி ரூபாய் வசூல் கண்­டன.

அதே­போல் சிவ­கார்த்­தி­கே­யன் நடித்த 'டாக்­டர்', 'டான்' ஆகிய இரு படங்­கள் அடுத்­த­டுத்து நூறு கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ளன.

இதை­ய­டுத்து, நூறு கோடி ரூபாய் 'சங்­கத்­தில்' சிவா­வும் இணைந்­துள்­ளார்.

அத­னால்­தான் சிவாவை நடி­கர் ரஜி­னி­யும் நேரில் அழைத்­துப் பாராட்டி உள்­ளார்.

இந்­நி­லை­யில், சிம்­பு­வின் பட­மும் 117 கோடி ரூபாய் ஈட்­டி­யுள்­ளது என்று தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி அறி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பான டுவிட்­டர் பதி­வில், "இந்த ஆண்­டின் மிகப்­பெ­ரிய பிளாக்­பஸ்­டர் பட­மாக 'மாநாடு' அமைந்­துள்­ளது," என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.