'விக்ரம்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சி வரும் 3ஆம் தேதி மலேசியாவில் வெளியீடு காண உள்ள நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கமல்ஹாசனும் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது ஊழலுக்கு எதிரான செயல்பாடு, இந்திய வரலாறு, நல்ல நிர்வாகம் குறித்து இருவரும் பேசியதாக அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும் 3ஆம் தேதி 'விக்ரம்' பட சிறப்புக் காட்சியைப் பார்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மகாத்மா காந்தி குறித்து இருவரும் பேசியதாக கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

