'நெஞ்சுக்கு நீதி' படத்தின் வெற்றிக்கு அதன் இயக்குநர் அருண்ராஜா காமராஜாதான் காரணம் என்கிறார் உதயநிதி ஸ்டாலின்,
இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன் என்றால் அது நடிகர் ஆரி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியீடு கண்ட இப்படம் விமர்சன, வசூல் ரீதியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் உதயநிதி, மனதுக்கு நிறைவளிக்கும் வகையில் நேர்மையான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"எங்களுடைய முயற்சிக்குக் கிடைத்த பாராட்டிற்கு நன்றி. மேலும், தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்காமல் காட்சிகளைப் படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
"படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு ஒரு விஷயத்தை உணர்ந்தேன். ஆரிதான் இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன்.
"இந்திப் படத்தை இயக்குநர் தமிழுக்குத் தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். சாதித்துக் காட்டிவிட்டார் இயக்குநர் அருண். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இந்த வெற்றி இயக்குநர் அருணுக்கும் அவரது மனைவிக்கும் சமர்ப்பணம்," என்றார் உதயநிதி ஸ்டாலின்.
, :

