'அகிலன்': கடற்படை அதிகாரியாக ஜெயம் ரவி

1 mins read
77f8fbc9-ecd8-4365-a4a0-11fa3d970910
'அகிலன்' படத்தில் இடம்பெறும் காட்சியில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர். -

'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'அகிலன்'. இதன் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு நேற்று வெளியானது.

இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக் கின்றனர்.

ஜெயம் ரவிக்கு இதில் இரட்டை வேடங்­கள் என்­றும் ஒரு கதா பாத்­தி­ரத்­தில் கடற்­படை அதிகாரி யாக நடித்­துள்­ளார் என்­றும் கூறப்­படு­கிறது.

துறை­மு­கத்தை மைய­மா­கக் கொண்ட இப்­ப­டத்­தின் பெரும்­பாலான காட்­சி­கள் தூத்­துக்­கு­டி­யி­லும் சில முக்­கிய காட்­சி­கள் சென்னை காசி­மேட்­டி­லும் பட­மாக்­கப்­பட்­டுள்­ளன.

80 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் குஜ­ராத்­தில் உள்ள மிகப் பெரிய கொள்­க­லன் தளத்­தில் எடுக்­கப்­படும் காட்­சி­களு­டன் படப்­பி­டிப்பு நிறை­வ­டை­கிறது.

முழுக்க துறை­முகப் பின்­ன­ணி­யில் உரு­வா­கி­யுள்ள 'அகி­லன்' படம், தமிழ்த் திரை­யு­ல­கில் புது­மை­யான முயற்­சி­யாக இருக்­கும் என்­றும் ஜெயம் ரவி­யின் பாத்­தி­ரங்­களும் அவ­ரது நடிப்­பும் பெரி­தும் பேசப்­படும் என்­றும் படக் குழு­வி­னர் தெரி­விக்­கின்­ற­னர். படம் மிக விரை­வில் திரை­ய­ரங்­கு­களில் வெளியீடு காண உள்ளது.