திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
f11b221f-5de8-47dc-8348-75ea29bbb71c
-
multi-img1 of 3

 இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் நடித்து வெளியான 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்க ளைப் பெற்றன. இதை யடுத்து அவர் நடித்துள்ள படம் 'இடி முழக்கம்'. இதில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி நாளை வெளியிடப்படுகிறது.

 'ஹே சினாமிகா' படத்தை அடுத்து, சண்டைக்காட்சிகள் நிறைந்த அதிரடி படத்தை இயக்க உள்ளார் நடன மாஸ்டர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியிட உள்ளனர். பெண் இயக்குநர்களாலும் அதிரடி படைப்புகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தமது இரண்டாவது படம் அமையும் என்கிறார் பிருந்தா.

 மலேசியாவில் வரும் 15ஆம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச்சீட்டுகள் இணையம் வழி 45 நிமிடங்களில் மொத்தமாக விற்றுத் தீர்ந்துவிட்டன.

 ஜெயம் ரவி அடுத்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'ஜனகனமன', 'அகிலன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றை முடித்த கையோடு, இந்த ஆண்டு நவம்பர் முதல் ஹரி இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சமூக ஊடகங்களில் காணொளிப்பதிவை வெளியிட்டு, தன்னைப் பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவதூறு பரப்பி வருவதாக பின்னணிப் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார். இதன் பின்னணியில், தனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் உள்ளதாக அவர் காவல்துறை யில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். "பயில்வான் ரங்கநாதன் என்னைப் பற்றி பேசும்போது, 'மனநலம் பாதிக்கப்பட்டவர், போதைக்கு அடிமையானவர், வாய்ப்புக்காக பாலியல் இச்சைக்கு உடன்படுபவர்' என எந்தவித ஆதாரமும் இன்றி விமர்சித்துள் ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்," என்கிறார் சுசித்ரா.