'மரியாதை கிடைக்கும் வரை ஓய மாட்டேன்'

'மரியாதை கிடைக்கும் வரை ஓய மாட்டேன்'

2 mins read
b75233b4-9a1f-4d5e-99ad-09fcdf0b79f5
-

தென்­னிந்­திய நடி­கை­கள் என்­றால் இந்­தித் திரை­யு­ல­கில் அவ்­வ­ளவு மரி­யாதை கிடைக்­காது என்று வெளிப்­ப­டை­யா­கப் போட்டு உடைக்­கி­றார் நடிகை டாப்சி.

தென்­னிந்­திய திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி, பிறகு வட­இந்­தி­யா­வில் காலூன்­றிய கதா­நா­யகி இவர். இன்று ஒரு தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் தன்னை நிலை­நி­றுத்­திக்­கொள்ள கடு­மை­யாக உழைத்து வரு­கி­றார்.

இந்­திய கிரிக்­கெட் வீராங்­கனை மித்­தாலி ராஜின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார் டாப்சி. இந்­தப் படம் அடுத்த மாதம் வெளி­யீடு காண உள்­ளது.

பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­படுத்தி உள்ள இந்­தப் படம், டாப்சிக்கு சில விரு­து­க­ளைப் பெற்­றுத்­த­ரும் என்­கி­றார்கள் சினிமா விமர்­ச­கர்­கள். இத்­த­னைக்­கும் கிரிக்­கெட் விளை­யாட்­டுக்­கும் டாப்­சிக்­கும் ஏணி வைத்­தா­லும் எட்­டாது.

"பல கோடி இந்­தி­யர்­க­ளைப் போல் நானும் சிறு வயது முதல் கிரிக்­கெட் ரசிகை. ஆனால், இந்­தப் படத்தில் நடிக்­கும் வரை ஒரு முறை­கூட கிரிக்­கெட் மட்­டையை நான் தொட்­ட­தில்லை. மேலும், மித்­தாலி ராஜ் பல சாத­னை­க­ளைப் புரிந்­த­வர். அதி­கம் பேசா­த­வர். நானோ வாயைத் திறந்­தால் இடை­வி­டா­மல் வள­வ­ள­வென்­றுப் பேசிக்­கொண்டே இருப்­பேன்.

"அத­னால் எனக்­கு­ரிய வச­னங்­க­ளைப் பேசும்­போது கூடு­தல் நிதா­னத்­தைக் கடைப்­பி­டித்­தேன். எந்­த­வோர் இடத்­தி­லும் எனது சாயல் தெரிந்­து­வி­டக் கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தேன். உண்­மை­யைச் சொல்­வ­தா­னால் எனது திரை வாழ்க்­கை­யில் நான் மிக­வும் சிர­மப்­பட்டு நடித்த படங்­களில் இது­வும் ஒன்று," என்று சொல்­லும் டாப்சி, அண்­மை­யில் இந்­திய பேட்­மிண்­டன் அணி தாமஸ் கிண்­ணத்தை வென்­ற­போது மகிழ்ச்­சி­யின் உச்­சத்­துக்­குச் சென்­று­விட்­டார்.

சமூக ஊட­கங்­களில் இவர் இந்­திய அணிக்கு வாழ்த்து தெரி­விக்க, ஆயி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­களும் வாழ்த்து மழை பொழிந்­த­னர். டாப்­சி­யின் கூடு­தல் உற்­சா­கத்­துக்­குக் கார­ணம், அவ­ரது நண்­பர் மதி­யாஸ் போ என்­ப­வர்­தான் இந்­திய அணி­யின் பயிற்­சி­யா­ளர்.

"முன்­னாள் டென்­மார்க் அணி வீர­ரான அவர் மிகுந்த திற­மை­சாலி. அவ­ரது வழி­காட்­டு­த­லில்­தான் இந்­திய அணி சாதனை புரிந்­துள்­ளது. எனவே, எனது நண்­ப­ரின் வெற்­றிக்­கா­க­வும் கொண்­டாட்­டத்­தில் ஈடுபட்­டேன்," என்று சொல்லும் டாப்சி, இந்­தித் திரை­யு­ல­கில் தென்­னிந்­திய நடி­கை­கள் நிலைத்­தி­ருப்­பது அவ்வளவு எளிதல்ல என்­கி­றார். அண்­மைய பேட்டி ஒன்­றில், தென்­னிந்­திய நடி­கை­களை அழு­கிய தக்­காளி போல் இந்­தித் திரை­யு­ல­கத்­தி­னர் கரு­து­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் தென்­னிந்­தி­யப் பெண் அல்ல. பஞ்­சாபி பெண். இருப்­பி­னும், தென்­னிந்­திய படத்­தில் அறி­மு­க­மாகி, பிறகு இந்­திக்­குச் சென்­ற­தால் எனக்­கு­ரிய மரி­யாதை கிடைக்­க­வில்லை. நான் நடிக்­கத் தொடங்கி 12 ஆண்­டு­கள் ஆகின்­றன. இன்­ன­மும் எனக்­கான இடத்­துக்­காக போரா­டிக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன்.

"இப்­போது எனது அனு­ப­வத்தை நம்பி சொந்­தப்­ப­டம் தயா­ரிக்­கி­றேன். 'ப்ளர்' என்ற அந்த இந்­திப்­ப­டம் இந்த தலை­மு­றைக்­கான படைப்பு.

"படத்­த­யா­ரிப்­பு என்பது பதற்­ற­மும் கவ­லை­யும் அளிக்­கக்­கூ­டிய வேலை. இருப்­பி­னும் அதை ஒழுங்­கா­கச் செய்­தால் சம்­பா­திக்­க­லாம். எனக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க மாட்டேன். அவற்றைப் பெறுவதற்குப் போராடுவேன்," என்கிறார் டாப்சி.