விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை

விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை

1 mins read
71975ac7-aed3-4528-97fe-0f9b87add6e3
படப்பிடிப்பின்போது சூரி, விஷ்ணு விஷால். -

நடி­கர் சூரி அளித்த நில மோசடி புகா­ரின் பேரில் நடி­கர் விஷ்ணு விஷா­லி­டம் சென்னை காவல்­துறை விசா­ரணை நடத்­தி­யுள்­ளது.

மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் விசா­ர­ணைக்கு நேரில் முன்­னி­லை­யா­கு­மாறு விஷ்ணு விஷா­லுக்கு அழைப்­பாணை அனுப்பி இருந்­த­னர். அதை ஏற்று நேற்று முன்­தி­னம் அவர் நேரில் முன்­னி­லை­யா­னார்.

நிலம் வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி விஷ்ணு விஷா­லின் தந்­தை­யும் ஓய்வு பெற்ற காவல்­துறை அதி­கா­ரி­யு­மான ரமேஷ் கொட­வாலா பெருந்­தொ­கையை பெற்­றுக்­கொண்டு தம்மை ஏமாற்­றி­விட்­ட­தாக கூறி வரு­கி­றார் சூரி.

இது­தொ­டர்­பாக அவர் சென்னை காவல்­துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­துள்­ளார். மேலும், சென்னை உயர் நீதி­மன்­றத்­தி­லும் வழக்கு தொடுத்­தார்.

இதை­ய­டுத்து, நீதி­மன்ற உத்­த­ர­வின் பேரில் நில மோசடி தொடர்­பாக சென்னை காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது. ஏற்­கெனவே விஷ்ணு விஷா­லின் தந்தை­யி­டம் பல­மணி நேரம் விசா­ரணை நடத்­திய காவல்­து­றை­யி­னர், பின்­னர் நடி­கர் சூரியி­ட­மும் விசா­ரணை நடத்­தி­யது.

காவல்­து­றை­யி­னர் எழுப்­பிய நூற்­றுக்­கும் மேற்­பட்ட கேள்­வி­க­ளுக்கு சூரி பதி­ல­ளித்­துள்­ளார். இதற்­காக காவல் ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் அவர் மூன்று முறை முன்­னி­லை­யா­னார். இந்­நி­லை­யில், தற்­போது விஷ்ணு விஷா­லி­ட­மும் விசா­ரணை நடந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் மத்­திய குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­னர் அவ­ரி­டம் பல­மணி நேரம் விசா­ரணை நடத்­தி­ய­தா­க­வும் அப்­போது நிறைய கேள்­வி­கள் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.