'இது 25 ஆண்டுகால போராட்டம்'

'இது 25 ஆண்டுகால போராட்டம்'

1 mins read
65d35098-4d68-4675-ae39-16bc236654ed
-

'யானை' படத்­தின் வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார் அருண் விஜய்.

பிரியா பவானி சங்­கர் நாய­கி­யாக நடித்­துள்ள இப்­ப­டத்­துக்கு ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார்.

தாம் இது­வரை நடித்த படங்­களில் அதிக பொருள் செல­வில் உரு­வான படம் இது­தான் என்­கி­றார் அருண் விஜய்.

"இந்­தப் படத்தை கொரோனா நெருக்­க­டிக்கு இடையே மிக­வும் சிர­மப்­பட்டு உரு­வாக்கி உள்­ளோம். குடும்ப உணர்­வு­களும் அடி­தடி சண்­டைக்­காட்­சி­களும் நிறைந்த பட­மாக உரு­வாக்கி உள்­ளார் இயக்­கு­நர் ஹரி. "மூன்று நிமி­டங்­க­ளுக்கு இடை­வி­டா­மல் பட­மாக்­கப்­பட்ட இரண்டு சண்­டைக்­காட்­சி­கள் படத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. உட­லின் பல இடங்­களில் காயங்­கள் ஏற்­பட்­டன. அவற்­றைப் பொருட்­ப­டுத்­தா­மல் இந்த சண்­டைக்­காட்­சி­களில் நடித்து முடித்­துள்­ளேன்.

"திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. உங்­க­ளுக்­கான இடத்­தைப் பிடித்து­விட்­டீர்­களா என்று கேட்­கி­றார்­கள். நிச்­ச­ய­மாக இல்லை. அதற்­காக தொடர்ந்து போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றேன். எனது மைத்­து­ன­ராக இருந்­தா­லும் இயக்­கு­நர் ஹரியே இப்­போ­து­தான் என்னை ஒரு கதா­நா­ய­க­னாக ஏற்­றுக் கொண்­டி­ருக்­கி­றார். இன்­னும் நீண்ட தூரத்­தைக் கடக்க வேண்டி உள்­ள­தாக உணர்­கி­றேன்.

"'என்னை அறிந்­தால்' படத்­தில் வில்­ல­னாக நடித்­த­போது, ஒரு­வேளை எனது முடிவு தவ­றாக அமைந்­து­விட்­டால் மீண்­டும் புறப்­பட்ட இடத்­திற்கே திரும்ப வேண்­டி­யி­ருக்­கும் என்ற பயம் இருந்­தது. ஆனால் அப்படம் என் பாதையை மாற்றி அமைத்­தது. "இப்போது மக்கள் மனதில் எனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும், ஒரு முழுமையான வெற்றிக்காக தொடர்ந்து போராடுகிறேன்," என்கிறார் அருண் விஜய்.