திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
2f3cb7d2-80df-4676-8de9-00d5801edae3
-
multi-img1 of 3

 வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் திமிர் பிடித்த பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு நடிப்பது சவாலான அனுபவமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். "இதற்கும் முன் குறும்புத்தனமுள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். திமிர் பிடித்த பெண் வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை," என்கிறார் ராஷ்மிகா.

 'டான்' படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார் விஜய் தொலைக்காட்சி புகழ் பாடகி ஷிவாங்கி. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வருகிறார். இதன் அண்மைய பகுதியில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து, ரசிகர் ஒருவர் அவரை வெறுப்பேற்றும் விதமாக டுவிட்டரில் பதிவிட, அதற்கு, "வெறுப்பை வளர்ப்பதற்கு பதில் நல்ல விஷயங்களைப் பேசினால் நன்றாக இருக்குமே சகோதரா," என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராணுவம் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை 21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.