'என் கணவர் நல்ல வில்லன்'

'என் கணவர் நல்ல வில்லன்'

3 mins read
f0b8e6a8-bc35-40f2-939a-ecdd71d27c51
நடன இயக்குநர் ஜானியுடன் தனுஷ். -
multi-img1 of 2

'விக்­ரம்' படத்­தில் மட்­டு­மல்ல, தனது கண­வர் பகத் ஃபாசில் ஏற்று நடித்த அனைத்து வில்­லன் கதா­பாத்­தி­ரங்­க­ளுமே தமக்­குப் பிடித்­த­மா­ன­வை­தான் என்­கி­றார் நஸ்­ரியா.

மீண்­டும் நடிக்­கத் தொடங்­கிய பிறகு தமக்கு ஏற்ற நல்ல வாய்ப்­பு­கள் தேடி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

இவர் நடித்த 'அடடே சுந்­தரா' தெலுங்­குப் படம் தமி­ழி­லும் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்டு வெளி­யீடு கண்­டுள்­ளது.

இப்­ப­டத்­தின் அறி­முக நிகழ்­வுக்­காக சென்னை வந்­த­வர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், தமி­ழில் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் தனக்­கேற்ற கச்சி­த­மான கதா­பாத்­தி­ரம் அமைய காத்­தி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்.

தமி­ழில் இவர் நடித்­துள்ள 'திரு­ம­ணம் என்­னும் நிக்­காஹ்' உள்­ளிட்ட படங்­க­ளுக்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

நல்ல நடிகை என்று பெய­ரெ­டுத்த நிலை­யில், யாரும் எதிர்­பா­ராத வித­மாக மலை­யாள நடி­கர் பகத் ஃபாசிலை திரு­ம­ணம் செய்­து­கொண்டு திரை­யு­லகை விட்டு வில­கி­னார்.

இந்­நி­லை­யில், எட்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் நடிக்க வந்­தி­ருப்­ப­தா­க­வும் ரசி­கர்­கள் தன்னை ஏற்­றுக்­கொள்­வார்­கள் என்ற நம்­பிக்கை இருப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

"கதை கேட்­கும்போது நான் மொழியை மன­தில் வைத்­துக் கேட்­ப­தில்லை. நான் கேட்ட கதை எனக்­குப் பிடித்­து­விட்­டால் உட­ன­டி­யாக அதில் நடிக்க ஒப்­புக்­கொண்டு விடு­கி­றேன். அப்­ப­டித்­தான் 'அடடே சுந்­தரா' தெலுங்­குப் படத்தை ஒப்­புக்­கொண்­டேன்.

"படத்­தின் நாய­கன் நானி என்­பது ஒரு முக்­கிய கார­ணம். அவ­ரு­டைய கதைத் தேர்வு­களும் நடிப்­பும் எனக்­குப் பிடிக்­கும். தெலுங்கு சினி­மா­வில் இருக்­கும் ஒரு மலை­யாள நட்­சத்­தி­ரம் என்று அவரை நான் நினைத்­துக்­கொள்­வேன்.

"நானி­யு­டன் நடிக்­கும்­போது நம் வீட்­டில் உள்ள ஒரு­வ­ரு­டன் நடிப்­பது போலவே உணர்ந்­தி­ருக்­கி­றேன். மிக­வும் இள­கிய இத­யம் கொண்­ட­வர். படக்­கு­ழு­வில் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் மிக­வும் கௌர­வ­மாக நடத்­து­ப­வர். 'அடடே சுந்­தரா' படத்­தில் பிரா­மண வீட்­டுப் பைய­னாக அவ­ரும் நான் ஒரு கத்­தோ­லிக்க கிறிஸ்­த­வக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வ­ளா­க­வும் நடித்­துள்­ளோம்.

"எங்­க­ளு­டைய காதலை இரு குடும்­பங்­களும் எவ்­வாறு எதிர்­கொள்­கின்­றன என்­பதை­யும் அப்­போது நடக்­கும் களே­ப­ரங்­க­ளை­யும் இந்­தப் படத்­தில் சித்­தி­ரித்­துள்­ளோம். காத­லும் நகைச்­சு­வை­யும் சரி­வி­கி­தத்­தில் இருக்­கும். மேலும் பல சுவா­ர­சி­ய­மான அம்­சங்­க­ளை­யும் எதிர்­பார்க்­க­லாம். குடும்­பத்­து­டன் பார்த்து ரசிக்­கும் வித­மாக இப்­ப­டம் உரு­வாகி உள்­ளது," என்று சொல்­லும் நஸ்­‌ரியா, படப்­பி­டிப்பு முடிந்து வீடு திரும்­பி­விட்­டால், சினிமா குறித்து எது­வும் பேச­மாட்­டா­ராம்.

கண­வர் பகத் ஃபாசிலும் இதே கொள்­கை­யைப் பின்­பற்­று­வ­தால் வச­தி­யாக உள்­ள­தாம். இரு­வ­ருமே திரை­யு­ல­கில் இருப்­ப­தால் இப்­ப­டி­யொரு கொள்கை இருப்­பது நல்­லது என்­கி­றார்.

"இரு­வ­ருமே நடி­கர்­கள் எனும்­போது, தின­மும் 12 முதல் 18 மணி நேரம் படப்­பி­டிப்­பில் இருந்­து­விட்­டுத்­தான் வீடு திரும்­பு­கி­றோம். பிறகு வீட்­டி­லும் சினி­மா­வைப் பற்றி பேசி­னால் அது சரி­யாக இருக்­காது.

"என் கண­வர் கதா­நா­ய­கன், வில்­லன் என எந்த பாத்­தி­ரத்தை ஏற்­றுக்­கொண்­டா­லும் அதை கதா­பாத்­தி­ர­மாக மட்­டுமே பார்ப்­பார். வில்­லன் என்­றால் அதில் நடிப்­புத்­தி­ற­மையை வெவ்­வேறு வித­மாக வெளிப்­ப­டுத்த வாய்ப்பு கிடைக்­கும் என்­பார்.

"அவ­ரது வில்­லன் கதா­பாத்­தி­ரங்­கள் எனக்கு மிக­வும் பிடிக்­கும். எனி­னும், மற்­ற­வர்­களை அடிப்­பது, கொலை செய்­வது போன்ற காட்­சி­களில் நடிப்­பதை சற்றே குறைத்­துக்­கொள்­ளும்­படி அவ­ரி­டம் அடிக்­கடி கூறு­கி­றேன். அதே­ச­ம­யம் சினி­மா­வில் சில­வற்­றைத் தவிர்க்க இய­லாது என்­ப­தை­யும் உணர்ந்­தி­ருக்­கி­றேன்.

"மொத்­தத்­தில் என் கண­வர் திரை­யில் தோன்­றும் நல்ல வில்­லன்," என்­கி­றார் நஸ்­‌ரியா.

திரைப்­ப­டக் கலை­ஞர்­கள் என்ற வகை­யில், இவ­ரும் பகத் ஃபாசிலும் முத­லில் நண்­பர்­க­ளா­கத்­தான் பழ­கி­னார்­க­ளாம். நேரில் பார்க்­கும்­போது ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பாராட்­டிக்­கொள்ள, நட்பு மேலும் நெருக்­க­மாகி தொலை­பே­சி­யி­லும் உரை­யா­டல்­கள் தொடர்ந்­துள்­ளன.

"ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நன்கு புரிந்­து­கொண்ட பிறகே காத­லைப் பரி­மா­றிக்­கொண்­டோம். நாங்­கள் காத­லிப்­பது தெரிந்­த­தும் இரண்டு தரப்பு பெற்­றோ­ருமே எங்­களை அங்­கீ­க­ரித்­தார்­கள். அத­னால் திரு­ம­ணத்­தில் எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டவில்லை.

"சமூக ஊட­கங்­கள் வழி­யாக ரசி­கர்­க­ளுக்கு என் வாழ்க்­கை­யின் ஒவ்­வொரு நல்ல தரு­ணத்­தை­யும் தெரி­யப்­ப­டுத்­து­கி­றேன். ரசி­கர்­கள் நல்ல புரி­தல் கொண்­ட­வர்­கள். அவர்­க­ளின் அன்பு, ஆத­ர­வால்­தான் மீண்­டும் நடிக்க வந்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் நஸ்­‌ரியா.

இரண்டாவது சுற்றில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் தமது விருப்பம் என்றும் அது கிடைக்கும் வரை காத்திருக்கப் போவதாகவும் சொல்கிறார் நஸ்‌ரியா.

, :

  