சிபிராஜ்: 'மாயோன்' சாமி படம் அல்ல

சிபிராஜ்: 'மாயோன்' சாமி படம் அல்ல

1 mins read
1b28a3cd-b8b3-4cac-941b-26928c56bf86
'மாயோன்' படத்தில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன். -

சிபி­ராஜ் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'மாயோன்' திரைப்­ப­டம் விரை­வில் திரை­காண உள்­ளது.

இந்­நி­லை­யில், படத் தலைப்­பைப் பார்த்­து­விட்டு இது சாமி படம் என்ற முடி­வுக்கு ரசி­கர்­கள் வந்­து­வி­டக்­கூ­டாது என சிபி­ராஜ் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அதை­யும் தாண்டி வேறு பல அம்­சங்­கள் இருப்­ப­தாகக் கூறி­யுள்­ளார். தான்யா ரவிச்­சந்­தி­ரன் முதல் முறை­யாக சிபி­யு­டன் இணைந்து நடித்­துள்­ளார்.

மாறு­பட்ட திரைக்­க­தை­யு­டன் ஆன்­மி­கம், அறி­வி­யல், சிலைக்­கடத்­தல், புதை­யல் வேட்டை என பர­பரப்பான திகில் பட­மாக தயா­ராகி வரு­கிறது 'மாயோன்'.

இதன் திரைக்­க­தையை தயா­ரிப்­பா­ளர் அருண்­மொழி மாணிக்­கம் எழு­தி­யுள்­ளார். என்.கிஷோர் இயக்கி உள்­ளார்.

"இந்­தப் படத்­தின் திரைக்­கதை ஒரு புதிய களத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் இடம்­பெற்­றுள்ள நடி­கர் நடி­கை­கள் அனை­வ­ரும் பொருத்­த­மாக அமைந்­தார்­கள். எல்­லோ­ரும் சேர்ந்து நிறைய உழைத்து இருக்­கி­றோம். இளை­ய­ராஜா இப்­படத்­துக்கு இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­டதை எங்­க­ளுக்­குக் கிடைத்த வரம் என்­று­தான் கூற வேண்­டும். படத்­தின் கதை, நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்­களுக்­கும் எளி­தில் புரி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கும்.

"இண்­டி­யானா ஜோன்ஸ்', 'டாவின்சி கோட்' போன்ற படங்­கள் எல்­லாம் எனக்கு மிக­வும் பிடிக்­கும். அது­போன்ற ஒரு கதை­யில் நடிக்கவேண்­டும் என்ற எனது நீண்­ட­கால ஆசை இப்­ப­டத்­தின் மூலம் நிறை­வே­றி­யது. இது சாமி படம் அல்ல. அதைத்­தாண்டி நிறைய இருக்­கிறது," என்­கி­றார் சிபிராஜ்.