அடுத்த வெற்றிக்கு காத்திருக்கும் தனுஷ்

அடுத்த வெற்றிக்கு காத்திருக்கும் தனுஷ்

1 mins read

ஒரே சம­யத்­தில் மூன்று படங்­களில் நடித்­துக்­கொண்டே அடுத்து நடிக்க உள்ள மூன்று படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார் தனுஷ்.

இவர் நடிக்­கும் 'திருச்­சிற்­றம்­பலம்' படத்தை சன் பிக்­சர்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது. இப்­ப­டத்­தின் முதல்­ தோற்­றச் சுவ­ரொட்டிக்கு தனுஷ் ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

மித்­ரன் ஜவ­ஹர் இயக்­கி­யுள்ள இந்­தப் படத்­தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்­கர் என மூன்று நாய­கி­கள் உள்­ள­னர். அனி­ருத் இசை­ய­மைத்­துள்­ளார். மேலும் பார­தி­ரா­ஜா­வும் பிர­காஷ்­ரா­ஜும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

கதைப்­படி, அனுஷா என்ற கதா­பாத்­தி­ரத்­தில் ராஷி கண்­ணா­வும் ரஞ்­ச­னி­யாக பிரியா பவானி சங்­க­ரும் ஷோப­னா­வாக நித்யா மேன­னும் நடித்­துள்­ள­னர். பிர­காஷ் ராஜ் கதா­பாத்­தி­ரத்­துக்கு நீல­கண்­டன் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

தனுஷ் நடிப்­பில் கடை­சி­யாக வெளி­யான 'மாறன்' படத்­தின் வசூல் சொல்­லிக்­கொள்­ளும்­படி அமை­ய­வில்லை. இந்­நி­லை­யில், சன் பிக்­சர்ஸ் வெளி­யீடு என்­ப­தால் 'திருச்­சிற்­றம்­ப­லம்' படம் அதிக எண்­ணிக்­கை­யி­லான திரை­ய­ரங்கு­களில் வெளி­யீடு காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தப் படம் விமர்­சன, வசூல் ரீதி­யில் வெற்றி பெறும் என உறு­தி­யாக நம்­பு­கி­றா­ராம் தனுஷ்.

'அர­பிக்­குத்து' பாட­லுக்கு நட­னம் அமைத்­துள்ள ஜானி மாஸ்­டர் இந்­தப் படத்­தி­லும் இரண்டு பாடல்­களுக்கு நட­னம் அமைத்­துள்­ள­தா­கத் தக­வல். அனி­ருத் இசை­ய­மைப்­பில் உரு­வா­கி­யுள்ள பாடல்­கள் இளை­யர்­களை நிச்­ச­யம் கவ­ரும் எனப் படக்­கு­ழு­வி­னர் தெரி­விக்­கின்­ற­னர். இதற்கிடையே, மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ள தனுஷ், அதற்கான கதையை எழுதி முடித்துவிட்டாராம்.