தாம் உழைத்து சம்பாதித்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்று தன் பெற்றோர் விரும்பியதாகவும் அந்த ஆசையைத் தாம் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறுகிறார் யாஷிகா ஆனந்த்.
இதுகுறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சொந்த வீடு வாங்கி, தன் பெற்றோரின் கனவை தம் மால் நிறைவேற்ற இயலும் என ஒருபோதும் ஒருபோதும் நினைத்ததே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் மிகவும் ஆசைப்பட்ட, விரும்பிய ஒரு கனவு கடின உழைப்பின் மூலம் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கு 19 வயதாக இருக்கும்போதுதான் இப்போது வாங்கியுள்ள வீட்டைப் பார்த்து முன்பதிவு செய்தோம். ஆனால் கொரோனா தொற்று, சாலை விபத்தில் சிக்கியது போன்றவற்றால் இரண்டு ஆண்டுகள் வேகமாக கடந்தோடிவிட்டன.
"இந்த வீட்டுக்குள் நுழைவதற்கான சரியான நேரம் இப்போதுதான் அமைந்தது. இந்த வயதில் நான் ஒரு வீட்டை வாங்குவேன் என நினைக்கவே இல்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்," என்கிறார் யாஷிகா ஆனந்த்.

